2026 தேர்தல் திமுக வேட்பாளர்கள்.. ஸ்டாலின் கறாராக சொன்ன விஷயம்! மா.செக்கள் கூட்டத்தில் திக்திக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு பற்றி இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

Stalin Discusses Candidate Selection for 2026 Polls at DMK District Secretaries Meet

திமுக மா.செக்கள் கூட்டத்தில்

இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 'நாடு போற்றும் நான்காண்டு..! தொடரட்டும் இது பல்லாண்டு!' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் 1244 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் வரும் ஜூன் 1ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும்

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஸ்டாலின், "நம்முடைய பலமே, கட்சி கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம், இருக்க வேண்டும். தடங்கல் என்பது எப்போதும் நமக்கு இருக்கும். அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்." எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு ஆர்டர்

மேலும், அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும் என்றும் இன்றைய மா.செக்கள் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

2026 சட்டசபை தேர்தல்

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்தக் கூட்டணியில் இணைய உள்ள கட்சிகள் உடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தவெக புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருவதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள கட்சிகள் கூட்டணியில் தொடர இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, கட்சிக்குள் சீட் பெறவும் பலரும் காய்நகர்த்தல்களை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலில் திமுக புதிய முகங்கள் பலரை களமிறக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இன்று வேட்பாளர் தேர்வை தலைமை பார்த்துக் கொள்ளும், நீங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என அறிவுறுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+