திமுகவில் பதவிகளுக்கு தேர்தல் நடந்தால்.. உட்கட்சி மோதல் வெடிக்குமே.. ஸ்டாலினின் சபாஷ் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வர ஸ்டாலின் தயாராகிவிட்டார். ஆகஸ்ட் 22ல் செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட ஒருவாரத்திற்குள் 110 மாவட்டங்களை பிரித்து அறிவித்துவிட்டார். இதனால் சீனியர் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் என்ன செய்யலாம் என்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவில் கிளைக் கழகம் தொடங்கி மொத்தமாக 6 லட்சம் பதவிகள் இருக்கிறது. இதில் கிளை, வட்டம், ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட பதவிகள் அனைத்தையும் தேர்தல் மூலமாகவே நிரப்ப வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். ஆனால் தேர்தல் நடந்தால், மீண்டும் குறுநில மன்னர்களின் அடிபொடிகள் பதவிகளுக்கு வருவார்கள் என்று கட்சியினர் மத்தியில் கணக்கு போடப்படுகிறது.

Stalin DMK Udhayanithi Stalin

ஆனால் ஸ்டாலினின் கணக்கு வேறாக இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் நடந்தால் தான் கட்சிக்குள் புதியவர்கள் கொண்டு வரப்படுவார்கள். புதியவர்களை தன்னுடைய ஆதரவு வட்டத்திற்குள் வைக்க வேண்டிய தேவை ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் ஏற்படும். அதேபோல் கட்சித் தேர்தலின் போதும் கோடிக்கணக்கான பணம் செலவிடப்படும்.

இதனால் கட்சியினருக்கு போதுமான மரியாதை அளிக்கப்படும் என்பதோடு, பொருளாதார நலன்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக திமுக தலைமை கணித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் தோல்வியால் திமுக இன்னும் துவண்டு கிடப்பதாக பல்வேறு தரப்பினர் மத்தியில் ஒரு எண்ணம் இருக்கிறது. அதனை மாற்ற தேர்தல் அவசியம் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார்.

கட்சித் தேர்தல் நடைபெற்றால், நிச்சயமாக நிர்வாகிகளுக்கு இடையில் மோதல் நடக்கும். அப்படி மோதல் நடக்கும் போது திமுகவில் இன்னும் அதிகாரத்தை கைப்பற்ற மிகப்பெரிய போட்டி நடக்கிறது என்பது இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாகும். அது திமுகவை ஜென் ஸி தலைமுறையினர் பக்கம் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்று திமுக தலைமை கருதுகிறது.

சீனியர், ஜூனியர் போட்டி கட்சிக்குள் அதிகமாக இருக்கும் என்றாலும், ஜூனியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவில் கொண்டு வரப்படுவார்கள் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார். சில மாவட்டங்களில் ஜூனியர்கள் வெற்றி பெறும் பட்சத்தில், அது மற்ற மாவட்டங்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

கட்சித் தேர்தல் தேவையா என்று சீனியர்கள் பலரும் கேட்டு வரும் சூழலில், ஜென் ஸி தலைமுறையை கட்சிக்குள் கொண்டு வர கட்டாயம் தேர்தல் அவசியம் என்பதே ஸ்டாலினின் கணக்காக இருக்கிறது. ஆனால் கட்சிக்குள் தேர்தல் நடந்தால் மீண்டும் கோஷ்டி பூசல் உச்சத்திற்கு வரும் என்றும் சீனியர்கள் கவலை கொண்டுள்ளனர். இதனால் ஸ்டாலினின் நடவடிக்கை திமுகவுக்கு வலு சேர்க்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+