சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டாவில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்! சேதத்தை பார்வையிட அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர்!

பயிர்சேதத்தை பார்வையிட அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அதன் சேத விவரங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வரும் திங்கட்கிழமை அன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, சேத விபரங்களை அறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அளித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;

கனமழையால் சம்பா பயிர்கள் பாதிப்பு.. டெல்டா விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்குக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்கனமழையால் சம்பா பயிர்கள் பாதிப்பு.. டெல்டா விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்குக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்

அரசின் கவனத்துக்கு

அரசின் கவனத்துக்கு

கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

வருவாய்த் துறை

வருவாய்த் துறை

இந்த பருவம் தவறி பெய்த திடீர் மழை தற்போது குறைந்து வருகிறது, மேலும் நீரினை வடியவைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் முதல் நிலை ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

அமைச்சர்கள் குழு

அமைச்சர்கள் குழு

மேலும், இதனை நேரடியாக ஆய்வு செய்வதற்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். இவர்களுடன் வேளாண்மைத் துறைச் செயலாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளையும் இந்தக் கள ஆய்வினை மேற்கொண்டு விவசாயிகளைச் சந்தித்துப் பேசி விபரங்களைப் பெற அறிவுறுத்தியுள்ளேன்.

மேல் நடவடிக்கை

மேல் நடவடிக்கை

வரும் திங்கட்கிழமை (6-2-2023) அன்று இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, சேத விபரங்களை அறிந்து, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத் தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

English summary
Chief Minister Stalin has sent a ministerial team to assess the damage caused by inundation of paddy fields in delta districts due to incessant rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X