தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்த ஸ்டாலின்.. 3 நாளில் வந்த 3 சூப்பர் நியூஸ்!
சென்னை: இன்னும் சற்று நேரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக 'ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து மக்களை கவர்ந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு இன்று: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த விதிகள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அமலில் இருக்கும். இதனால் நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் நிதி மானியங்களை அல்லது புதிய திட்டங்களை அறிவிக்கவோ அதற்கான வாக்குறுதிகளை வழங்கவோ கூடாது. ஆனால் பழைய நிதியுதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களைத் தவிர, பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சகர்கள் எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டவோ தொடங்கி வைக்கவோ முடியாது. அரசு அதிகாரிகள் மட்டுமே புதிய திட்டங்களை தொடங்கி வைக்கலாம்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்ற நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக 3 முக்கிய திட்டங்களின் கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி காட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
ஹாட்ரிக் சிக்ஸர்: லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக 3 ஹாட்ரிக் சிக்சர்களை அடித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி தற்போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது.
அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து, அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி ஆனது கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், மார்ச் மாதத்திற்கான ஊதியத்துடன் நிலுவையில் உள்ள மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பினால் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவிகள் மகிழ்ச்சி: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 'சூப்பர்’ அறிவிப்பு!
இந்நிலையில், ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 49,664 மாணவிகள் கூடுதலாக பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 திட்டங்களின் மூலம், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், மாணவிகளின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவிகளின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இந்த கோப்புகளில் கையெழுத்திட்டு, மக்களை ஈர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வரப்போகுது.. வெளியானது தமிழக அரசின் அரசாணை.. படித்தால் மட்டும் போதும்!
4 ஏரியா மக்கள்: அதேபோல, நேற்று ஒரு முக்கிய அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டில் உள்ள 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக இந்த நகராட்சிகளை மாநகராட்சிகள் ஆக்குவதற்கு கோரிக்கை எழுந்து வந்த நிலையில், தற்போது அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்தப் பகுதிகளில், திமுக வேட்பாளர்கள், தங்கள் கட்சியின் சாதனையாகச் சொல்வதற்கான பாயிண்டுகளில் இந்த விஷயமும் இடம்பிடிக்கும். இது அப்பகுதி மக்களின் மத்தியில் திமுகவுக்கு ஆதரவைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் ஹாட்ரிக்: இப்படியாக, தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் 3 நாட்களில் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின். தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள், வரும் லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு மைலேஜ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications