சென்னையில் முதல்முறையாக.. உருமாற்றம் அடையும் கொரோனாவுக்கு புதிய ஆய்வகம்.. ஸ்டாலினின் புதுமுயற்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய புதிய ஆய்வகம் திறக்கப்படுகிறது. இதை டிஎம்எஸ் வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கொரோனா வைரஸை கண்டறிய தொண்டை, மூக்கு சளி மாதிரிகளை எடுத்து வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியலாம். ஆனால் உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டால் இந்த வகை பரிசோதனை கை கொடுப்பதில்லை.

இதற்கென தனி பரிசோதனை முறை உள்ளது. இந்த வைரஸை கண்டறிய இந்தியாவில் 10 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு ஆய்வகம் கூட இல்லை.

இரண்டாவது அலை

இரண்டாவது அலை

இந்த உருமாறிய கொரோனா வைரஸ்தான் இரண்டாவது அலையின் போது பெரும் உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. தற்போது மூன்றாவது அலை வருகிறது. இந்த அலையும் ஒரு வேரியன்ட்டால் மட்டுமே தீவிரமடையும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறுகிறார்கள்.

டெல்டா வேரியண்ட்

டெல்டா வேரியண்ட்

அவ்வாறிருக்கையில் தமிழகத்தில் டெல்டா வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டால் அதை வெளிமாநில ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு பரிசோதனை மேற்கொண்டு ரிசல்ட் வருவதற்கு நோயாளிக்கு நோய் பாதிப்பு மேலும் அதிகமாகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தலைநகர் சென்னையில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸைக் கண்டறியும் ஆய்வகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    C.1.2 அடுத்த உருமாறிய Corona.. Vaccine-க்கு கட்டுப்படாது.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
    டிஎம்எஸ் வளாகம்

    டிஎம்எஸ் வளாகம்

    அதன்படி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ 4 கோடி செலவில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டது. இங்கு சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வகத்தை நடத்துவதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    11 ஆய்வகங்கள்

    11 ஆய்வகங்கள்

    இவர்கள் பெங்களூரில் பயிற்சி முடித்துவிட்டு தற்போது பணியை தொடங்க தயார் நிலையில் உள்ளார்கள். இவர்களுடன் சேர்த்து மேலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வகத்தில் ஒரே நேரத்தில் 1000 மாதிரிகளை பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. இந்த ஆய்வகத்தை இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த ஆய்வகத்துடன் சேர்த்து இந்தியாவிவில் உருமாறிய கொரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல் மரபணு பகுப்பாய்வு மையம் இதுவே ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+