கீழடி புனை மெய்யாக்க செயலியை துவக்கி வைத்த முதல்வர்! 200 தொல் பொருட்களை 3Dயில் பார்க்கலாம்!
சென்னை: கீழடி அருங்காட்சியக தொல்பொருட்களை 3Dயில் பார்க்கும் வகையில் கீழடி புனை மெய்யாக்க செயலி (Keeladi Augment Reality (AR) App ஐ முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உலகில் எங்கிருந்தும் யாரும் காணும் வகையில் இந்தசெயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகத்திற்காக பிரத்தியேகமாக கீழடி Augment Reality (AR) செயலியை தமிழ்நாடு தொல்லியல் துறை உருவாக்கியுள்ளது. கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை AR மற்றும் 3D முப்பரிமாணத்தில் பார்க்கலாம்.

3D மற்றும் AR வியூவருடன் கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் தங்களின் கைபேசி வாயிலாகவே அகழாய்வுக் குழி மற்றும் தொல்பொருட்களைப் பார்வையிடும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கீழடியின் வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதலை அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு கட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பெறலாம்.
கீழடி AR செயலி கீழடி பண்பாட்டுப் பெருமைகளை உலகளவில் பறைசாற்றும் வகையிலும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும், கல்வியறிவு பெறும் வகையிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் அறிவியல் பகுப்பாய்வு முடிவுகள் வாயிலாக தமிழர்களின் வளமான பண்பாட்டு மரபுகள் நிரூபிக்கப்பட்டு வருகின்றன.
அகழாய்வுகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காகவும் கீழடி AR செயலி போன்ற தொழில்நுட்பங்களைத் தொடங்கி வைத்து இன்று மேற்கொள்ளப்படும் நல்ல பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications