முல்லை பெரியாறு அணை! கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்! பினராயிக்கு ஸ்டாலின் பதில்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் விதிகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த 5-ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி கடிதம் எழுதியிருந்த நிலையில், இப்போது பதில் கடிதம் அனுப்பப்படுள்ளது.
முல்லை பெரியாறு அணை அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 5-ஆம் தேதி பினராயி விஜயன் தனக்கு எழுதியிருந்த கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த அவரது கவலைகளை குறிப்பிட்டிருந்ததாக கூறியிருக்கிறார். அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பானது என்றும், அணையிலிருந்து விதிமுறைகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார் ஸ்டாலின்.

கள அலுவலர்கள்
மேலும், வெள்ள ஒழுங்குமுறை நெறிமுறையின் படி, அதிகபட்சமாக வைகைப் படுகையில் தண்ணீரைத் திருப்பிவிடவும், விதி நிலைகள் மற்றும் கேட் செயல்பாட்டு அட்டவணையை கவனமாகப் பின்பற்றவும் கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இரவு 7 மணி நிலவரப்படி நீர்மட்டம் 136 அடியாக இருந்தது என்றும் 4.8.2022 அன்று, எங்கள் கள அலுவலர்கள், 5.8.2022 அன்று ஸ்பில்வே கேட் திறக்கும் சாத்தியம் குறித்து, இரவு 7.40 மணிக்கு கேரளாவில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர் எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சராசரி நீர்வரத்து
மேலும் இந்த தகவல் இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரளாவில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதாகவும் ஸ்பில்வே ஷட்டர்கள் 5.8.2022 அன்று மதியம் 1.00 மணிக்கு திறக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.மேலும் 8.8.2022 காலை 7.00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138.85 அடியாகவும், சராசரி நீர்வரத்து 6942 கன அடியாகவும், கசிவுநீர் வெளியேற்றம் சுமார் 5000 கன அடியாகவும் உள்ளது என்றும் இது அங்கீகரிக்கப்பட்ட ரூல் கர்வ் விதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனவும் விளக்கி கூறியிருக்கிறார்.

பாதுகாப்பை உறுதி செய்வோம்
முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அணை நிர்வாகக் குழு மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் அணையின் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், உங்கள் முடிவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் போதுமான அளவு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications