கள நிலவரம் எப்படி இருக்கு? பணம் மட்டும் கொடுக்காதீங்க.. சீனியர்களிடம் கறாராக கூறிவிட்ட ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் கள நிலவரம் தொடர்பாக சீனியர்களிடம் ஸ்டாலின் போனில் அழைத்து விசாரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் கடைசி நேர பணப் பட்டுவாடா செய்தால் கணிசமான வாக்குகளை பெற முடியும் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் எந்தக் காரணத்தை கொண்டு பணம் கொடுக்க கூடாது என்று கறாராக கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் என்று 5 முனைப் போட்டி நிலவி வருகிறது. தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய 3 தரப்பும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தவெக தரப்பு தொகுதிக்கு 6 அமைச்சர்கள் என்று மொத்தமாக களமிறக்கி இருக்கிறது.

Stalin

இது போதாதென்று முதல்வர் விஜய்யும் இரு தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோல் திமுக தரப்பில் இம்முறை பொதுக்கூட்டம் என்ற பேச்சிற்கே இடம் கொடுக்கப்படவில்லை. பழைய ஸ்டைலில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளரிடமும் திமுக வாக்கு சேகரித்து வருகின்றனர். இரு தொகுதிகளிலும் முன்னாள் அமைச்சர்கள் படை களமிறக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தாராபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, முபெ சாமிநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். மதுராந்தகம் தொகுதியில் எவ வேலு, தாமோ அன்பரசன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் தேர்தல் பணிகள் கூடுதல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக திமுக சீனியர்களிடம் செல்ஃபோன் மூலமாக ஸ்டாலின் விசாரித்திருக்கிறார்.அப்போது சீனியர் அமைச்சர்கள் தரப்பில், இடைத்தேர்தல் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில் பணப் பட்டுவாடா செய்தால், கணிசமான வாக்குகளை பெற முடியும் என்று கூறி இருக்கின்றனர்.

ஆனால் ஸ்டாலின் நேரடியாக என்ன நடந்தாலும் சரி.. பணம் கொடுக்காமல் வெற்றிபெற வேண்டும். மக்களிடம் நம்முடைய சாதனைகளை கூறி வாக்கு கேளிங்கள் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த திமுகவும் கூடுதல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மறுபக்கம் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேரடியாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+