ஸ்டாலின், மோடியை ஒரே மேடையில் நிறுத்தும் ரஜினிகாந்த்? அப்ப அந்த விஷயம் உண்மை? ட்விஸ்ட் தந்த சுயசரிதை
சென்னை: ரஜினிகாந்த் சுயசரிதை எழுதி வருகிறார்.. ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு, தர்மன் படத்தில் நடித்து வருகிறார்.. அதில் நடித்து கொண்டே, ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதாக அவர் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியிருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில், நமக்கு சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் கிடைத்துள்ளன.
சுயசரிதை எழுதும் பணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.. அவரது மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிநாந்த் இதை பற்றி சொல்லியிருக்கும் தகவல் கோடிக்கணக்கான ரசிகர்களை ஆச்சரியத்திலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்த் சுயசரிதை
பரமஹம்ச யோகானந்தரின் புகழ்பெற்ற நூலைப் போன்ற வரலாற்று முக்கியத்துவத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சுயசரிதை புத்தகத்தில், பஸ் கண்டக்ராக தனது வாழ்க்கையை தொடங்கி தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் மாறிய பொன்னான தருணங்கள், அவர் சந்தித்த சவாலான போராட்டங்கள், சினிமா அனுபவங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான நெருக்கமான சந்திப்புகள் போன்ற பல அதிரடியான சுவாரஸ்யங்கள் விரிவாக இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது...
எனவே ரஜினிகாந்த்தின் சுயசரிதை நூல் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் இதுகுறித்து நமக்கு சில ஸ்பெஷல் தகவல்கள் கிடைத்துள்ளன.
பிரதமர் மோடி - ஸ்டாலின்
அதாவது இன்னும் 3 மாதங்களில் இந்த புத்தகத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினிகாந்த்.. தனது சுயசரிதை நூலை பிரதமர் மோடி வெளியிட முதல் பிரதியை திமுக தலைவர் ஸ்டாலினும் அடுத்தடுத்த பிரதிகளை அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை பெறும் வகையில் ஆலோசித்து வைத்துள்ளாராம்...
அதுமட்டுமல்ல, ரஜினியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைப்போல, நூலில் சொல்லப்பட்ட பல விஷயங்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் கள் ரஜினியின் குடும்பத்தோடு தொடர்புடையவர்கள்.
பாஜக - திமுக கூட்டணி?
ஆனால் இங்கே நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.. சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் திமுக மற்றும் பாஜக கட்சிகள் எதிர்காலத்தில் கைகோர்க்கப் போவதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அதற்கு இதுவரை திமுக தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்கப்படவில்லை..
அதுமட்டுமல்ல, மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில், "அதிமுக, திமுக கூட்டணி வைக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்ததுமே, ஓடோடி வந்து மறுப்பு சொன்னாரே முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இப்போது ஏன், திமுக-பாஜக என்ற செய்திகளுக்கு மறுப்பு சொல்லாமல் உள்ளார்? பொதுச்செயலாளர் ஏன் இதற்கு விளக்கமோ, கண்டனமோ தெரிவிக்காமல் உள்ளார்? டெல்லியில் நடந்த "அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்" மாநாட்டில் திமுகவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளாதது ஏன்" என்றெல்லாம் சந்தேகத்தை கிளப்பியிருந்தார்.
சுயசரிதை நூல் வெளியீட்டு விழா
இப்படிப்பட்ட சூழலில், ரஜினிகாந்தின் சுயசரிதை நூலை பிரதமர் மோடி வெளியிட, அதன் முதல் பிரதியை திமுக தலைவர் ஸ்டாலின் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக நமக்கு எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒருவேளை, பிரதமரும், ஸ்டாலினும் ஒரே மேடையில் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வது நிகழ்ந்தால், அது தமிழ்நாட்டில் எத்தகைய அரசியல் பூகம்பத்தை உருவாக்கும் என்ற கேள்வியை இப்போதே எழுப்பியுள்ளது.
அப்படி இரு தலைவர்களும் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால், அது வெறும் புத்தக வெளியீட்டு விழாவாக மட்டும் பார்க்கப்படாமல், தமிழக அரசியல் களத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் கருத்து மோதல்களிலும், கூட்டணி கணக்குகளிலும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படும்..!!!
- நமது சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
