எல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த திமுகவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக்
தேசிய தலைவர் காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட எங்கள் கூட்டணி தமிழகத்தில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளோம். இதற்காக ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொண்டோம். இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வென்றுள்ள நவாஸ்கனிக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.
மத்தியில் நல்லாட்சி வேண்டும் என்று தான் தமிழக மக்கள் வாக்களித்தனர். தமிழகத்தில் கலைஞர் இல்லையே என்கிற கவலை இருந்தது. கலைஞர் எப்படி செயல்படுவாரோ ஒருபடி மேலே சென்று மு.க. ஸ்டாலின் பிரச்சார வியூகங்களை அமைத்து சுறுசுறுப்பாக உழைத்தார். அவருடைய உழைப்பாலும், பிரச்சாரத்தாலும்தான் இந்த மாபெரும் வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது என பாராட்டினார்.
ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பாடுபட்டதை போல, ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டாலினைபோன்ற ஒருவரை தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்திருந்தால் மோடி ஆட்சி வந்திருக்காது. இதையும் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம் என்றார்.
இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் தொகுதியை தவிர 12 தொகுதிகள் அதிமுகவிடமிருந்து திமுக பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு முன்பு வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் வகுக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகளை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும். தமிழகத்திலுள்ள திராவிட பாரம்பரியம் போல் அமைய வேண்டும் என பேசினாா்
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications