ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்
சென்னை: தமிழக அரசியலில் அசைக்க முடியாத கோட்டைகள் என சில தொகுதிகள் உண்டு. அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் தொகுதி பல வருடங்களாகவே அதிமுகவின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. வரப்போகும் தேர்தலில் 5வது முறையாக அதே களத்தில் விஸ்வநாதன் களம் காண்கிறார். ஆனால், இந்த முறை நத்தம் விஸ்வநாதனுக்குக் காத்திருப்பது சாதாரண போட்டியல்ல, ஒரு மிகப்பெரிய அரசியல் சவால் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் அதிமுகவை தோற்கடிக்கவே முடியாத பல தொகுதிகள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக தனிப்பெரும் செல்வாக்கோடு இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக பல மாவட்டங்களில் அதிமுக தனிப்பெரும் செல்வாக்கோடு இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் அதிமுக
அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதியும் ஒன்று. 1977 முதல் 1996 ஆம் ஆண்டு வரை நத்தம் சட்டமன்ற தொகுதியை காங்கிரசின் கோட்டையாக வைத்திருந்தார் ஆண்டி அம்பலம். ஆனால் 2001 ம் ஆண்டு முதல் நத்தம் தொகுதியின் நிலைமை தலைகீழாக மாறியது. அதிமுகவின் விஸ்வநாதன் அந்த தொகுதியை தற்போது தனது கோட்டையாக மாற்றி வைத்துள்ளார்.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் விஸ்வநாதனுக்கு நத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக. இதன் மூலம் நத்தம் தொகுதியில் விஸ்வநாதன் 5வது முறையாக களமிறங்க உள்ளார். நத்தம் தொகுதியில் விஸ்வநாதன் பெற்று வரும் தொடர் வெற்றிகளை முறியடிப்பதற்காக திமுக தற்போது விசுவநாதனுக்கு எதிராக டஃபான ஒரு வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நத்தம் விஸ்வநாதனுக்கு செக்?
நத்தம் சட்டமன்ற தொகுதியில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக தலித்துகள், முக்குலத்தோர், வெள்ளாளர், வன்னியர் மற்றும் இஸ்லாமியர்கள் என பல்வேறு சமூகத்தினர் இருந்தாலும் முத்தரையர்களின் வாக்கு நத்தம் தொகுதியில் கொஞ்சம் அதிகம்.
இந்த நுட்பமான தகவலை அறிந்து தான் திமுக தலைமை நத்தம் தொகுதியில் இந்த முறை முத்தரையர் ஒருவரை வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதிலும் முத்தரையர் சமூகத்தினர் இடையே தற்போது குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற்று வரும் ஒருவரை களம் இறக்க திமுக கிட்டத்தட்ட முடிவே செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்டாலின் மிசைல் விஐபி
திமுக தலைமையின் முடிவின்படி நத்தம் தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக தமிழர் தேசம் கட்சியின் தலைவரான செல்வக்குமார் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
முத்தரையர் சமூகத்தின் இளம் தலைமுறை இடையே மிகப்பெரிய வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ள செல்வக்குமார் அண்மையில் திருச்சியில் மாபெரும் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி தனது செல்வாக்கு மற்றும் முத்தரையர்களின் வாக்கு பலத்தை நிரூபித்துள்ளார். அதன் அடிப்படையில் நத்தம் தொகுதியில் உள்ள பெருவாரியான முத்தரையர் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் தமிழர் தேசம் கட்சியின் தலைவரான செல்வகுமாரை நத்தம் தொகுதியில் களம் இறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
நத்தம் தொகுதியில் இருக்கும் பெரும்பான்மை சமூகமான முத்தரையர்கள் செல்வகுமாருக்கு பக்கபலம் என்றால் அவர் நத்தம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது மற்றொரு பலமாகவே பார்க்கப்படுகிறது.
திமுக சர்ப்ரைஸ் மூவ்
இதுவரை தோல்வியையே சந்தித்திராத நத்தம் விசுவநாதன் இந்த முறை மிகவும் வலுவான போட்டியாளரை களத்தில் எதிர்கொள்ள உள்ளார். நத்தம் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கோ அல்லது வேறு ஒரு கூட்டணி கட்சிக்கோ ஒதுக்கப்படலாம் என விஸ்வநாதன் நினைத்திருந்திருக்கலாம். ஆனால், தனது வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழர் தேசம் கட்சியின் தலைவரான செல்வகுமார் களமிறங்க உள்ளதால், நத்தம் விஸ்வநாதன் இந்த தேர்தலில் கொஞ்சம் அதிகப்படியாக வேலை பார்க்க வேண்டி இருக்கும் என ரத்தத்தின் ரத்தங்களே பேசிக்கொள்கிறார்கள்.
எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் மிக இயல்பாக கடந்து வந்த, நடந்து வந்த நத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையின் முடிவால் இந்த முறை பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications