ஸ்டாலினின் 4 பேர் டீம்.. மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த.. அந்த யோசனை வந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் அடுத்த இரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது வேகத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மக்களை கவரும் பல்வேறு நிதிச் சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது.

முக்கியமாக தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தின் மிக முக்கியமான வாக்கு வங்கியான பெண் வாக்காளர்களின் மனங்களை வெல்லும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடியைத் தொடங்கியுள்ளார்.

tamil nadu assembly elections 2026

ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்

கடந்த மாதம் பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. அதன்பின் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. வெறும் ஒரு மாத இடைவெளியில் ஒரு குடும்பத் தலைவியின் கையில் 9,000 ரூபாய் சென்று சேர்ந்திருப்பது, 2026 தேர்தலுக்கு முன்னதாக திமுக அரசு எடுத்துள்ள ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் அரசுத் துறைகள் வாயிலாகவே செயல்படுத்தப்பட்டாலும், இதன் பின்னணியில் நான்கு செல்வாக்குமிக்க உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு 'க்ளோஸ் டீம்' இயங்கி வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

அதிரடி காட்டும் 4 பேர்

இந்த நிர்வாக இயந்திரத்தைச் சத்தமில்லாமல் இயக்கி வருவது தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதிச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களான உமாநாத், சண்முகம் ஆகிய நால்வர் அடங்கிய குழுதான். கடந்த ஐந்தாண்டுகளாக முதலமைச்சரின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள இவர்கள், எந்தத் துறையாக இருந்தாலும் புதிய திட்டங்களைச் செதுக்குவதில் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனையைப் பெற்று, நிதி ஆதாரங்களைத் திரட்டி, அமைச்சர்களுக்குத் தெரியும்முன்னரே பல திட்டங்களை முதலமைச்சரின் ஒப்புதலுக்கு இவர்கள் கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் காலம் தொட்டு ஜெயலலிதா வரை, எந்தப் பக்கம் பெண் வாக்காளர்கள் நிற்கிறார்களோ அவர்களே கோட்டையைப் பிடிப்பார்கள் என்பது எழுதப்படாத விதி. பொருளாதார சுதந்திரம்: சாதாரணக் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் என்பது வெறும் தொகையல்ல; அது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு அல்லது சிறு கடன்களை அடைக்க உதவும் ஒரு பெரிய நிம்மதி. இதை 'இலவசம்' என்று சொல்லாமல் 'உரிமை' என்று சொல்வது பெண்களிடம் ஒரு கௌரவத்தை உருவாக்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதி முறியடிப்பு: அதிமுக தங்களது பிரசாரத்தில் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்துவோம் என்று கூறி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன்பே இவ்வளவு பெரிய தொகையைக் கையில் கொடுத்து, "நாங்களே அடுத்த முறை 2,000 ஆக உயர்த்துவோம்" என்று வாக்குறுதி அளிப்பதன் மூலம் திமுக அந்த பிரசாரத்தின் வேகத்தைக் குறைத்துள்ளது.

பயனாளிகளை "என் அன்புச் சகோதரிகள்" என்று அழைப்பதும், ஒரு அண்ணனாகப் பணத்தை முன்கூட்டியே தந்துவிட்டேன் என்று சொல்வதும், ஒரு கொள்கை ரீதியான உறவைத் தாண்டி ஒரு குடும்ப உறவாக இதை மாற்ற முதல்வர் முயல்கிறார்.

வேகமாக செயல்படும் அதிகாரிகள்

இந்த ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரத்தையும் முடுக்கிவிடுவது தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதிச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களான உமாநாத், சண்முகம் ஆகிய நால்வர் கொண்ட குழுதான். கடந்த ஐந்தாண்டுகளாக முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய டீமாக திகழும் இவர்கள், அமைச்சர்களைக் காட்டிலும் அதிக அதிகாரத்துடன் செயல்படுவதாகத் தெரிகிறது.

எந்தத் துறையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டாலும், நிதி ஒதுக்குவது முதல் அதைச் செயல்படுத்துவது வரை இந்த நால்வர் அணியே தீர்மானிக்கிறது. பொருளாதார ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலுடன், மாநிலத்தின் நிதி நெருக்கடியையும் மீறி 6,500 கோடி ரூபாய் போன்ற பிரம்மாண்டத் தொகைகளை ஒரே நாளில் விடுவிப்பது எப்படி என்ற ரகசியம் இந்த அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள் தலைமை செயலக வட்டாரத்தினர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+