ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது.. குறிப்பாக ஆளும் திமுக தரப்பில் வெளியாகியுள்ள உத்தேச வேட்பாளர் பட்டியல் அறிவாலயத்தையே அதிர வைத்துள்ளது.. வாரிசு அரசியல் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொகுதிகளில் நிலவும் அதிருப்தியை சரி செய்யவும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை கையில் எடுத்துள்ள "சர்ஜிகல் ஸ்ட்ரைக்" அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது...!!

2026 தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் சீட் பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. தேமுதிகவுக்கு 10+1 சீட் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. விசிக 12+2 கேட்ட நிலையில் அதிகபட்சமாக 8+2 வழங்கும் வாய்ப்பு பேசப்படுகிறது. இடதுசாரி கட்சிகளுக்கு முந்தையபோல் தலா 6 சீட் கிடைக்கலாம் என தகவல் கசிகின்றன.

Stalin DMK Duraimurugan Ponmudy Rahul Gandhi Tamil Nadu Assembly Election 2026 TN Election Special

விஐபிகளுக்கு ஜாக்பாட்?

மதிமுக 12 சீட் கேட்டாலும் 6 சீட் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் 6 சீட் கேட்ட நிலையில் அதிகபட்சமாக 3 சீட் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் பல சிறு கட்சிகளும் திமுகவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, வரும் 2026 தேர்தலில் இப்போதைய அமைச்சரவையில் உள்ள 11 முக்கிய அமைச்சர்களுக்கும், பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது..

ஸ்டாலின் கையில் லிஸ்ட்

காரணம், திமுக எப்படியும் இந்த முறை 180க்கும் அதிகமான தொகுதிகளில் களம் காண முடிவெடுத்துள்ள நிலையில், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீனியர்களை ஓரங்கட்ட தலைமை முடிவெடுத்துள்ளதாம்..

குறிப்பாக வயதான காரணங்கள் மற்றும் தொகுதி அதிருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சர்கள் ரகுபதி, காந்தி, நாசர், துரைமுருகன், பொன்முடி, ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளதாக கூறப்படுகிறது..

யார் யாருக்கு வாய்ப்பு

இதுமட்டுமின்றி மாவட்ட வாரியாகவும், சில முக்கிய பிரமுகர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று தகவல்கள் கசிகின்றன.. அதிலும் சென்னையில் அம்பத்தூர் சுதர்சனம், மாதவரம் எபினேசர், ஆர்.கே. நகர் ஆர்டி சேகர், பெரம்பூர் வெற்றி அழகன், எலும்பூர் பரந்தாமன், அண்ணாநகர் எம்.கே. மோகன், விருகம்பாக்கம் பிரபாகர் ராஜா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்றும் சோஷியல் மீடியாவில் செய்திகள் கசிந்து வருகின்றன..

முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை வேட்பாளர் பலம் வாய்ந்தவராகவும், நிச்சயமாக ஜெயிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்..

மறுபுறம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இந்த முறை அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது.. பல ஸ்டண்ட்களுக்கு பிறகு 28 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ், அதில் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் காந்தி ஒரு தனி டீமையே சென்னைக்கு அனுப்பியுள்ளாராம்..

ராகுல் காந்தி சர்ப்ரைஸ்

கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ராகுலின் உத்தரவின்படி, இந்த முறை 28 தொகுதிகளில் 15 இடங்கள் புதுமுகங்களுக்கு வழங்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது..

ஆக மொத்தம், திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இளைஞர்களுக்கும் புது முகங்களுக்கும் அதிக வாய்ப்பளிக்க முன்வந்துள்ளதால், வரும் சட்டமன்றத் தேர்தல் களம் மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.. எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ பட்டியல் வரும் வரை இது ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+