கே.என்.நேரு முந்திரிக்கொட்டை போல்! ஏன் அவரிடம் சொன்னோம்னு ஃபீல் பண்றேன்! முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
சென்னை: அமைச்சர் கே.என்.நேரு முந்திரிக்கொட்டை போல் எல்லாவற்றிலும் முந்திக்கொள்வார் என திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காரில் வரும் போது ஏன் அவரிடம் இந்த விஷயத்தை சொன்னோம் என்று ஃபீல் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி திருமங்கலம் கோபால் இல்ல மண விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை பற்றி காரில் வரும் போது அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசிக்கொண்டு வந்ததாகவும் அப்போது தான் சொல்லிய விவரங்கள் அனைத்தையும் மணவிழா மேடையில் முந்திக்கொண்டு பேசிவிட்டார் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், முந்திரிக்கொட்டையை போல் அமைச்சர் நேரு எல்லாவற்றிலும் முந்திக்கொள்ள நினைப்பார் என்றும் அந்தளவுக்கு அவரது ஸ்பீடு எனவும் கூறி வஞ்சப் புகழ்ச்சி அணி பாடினார். புகழ்வது போல் பேசி குட்டும் வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு காரணம் அண்மையில் சேலம் இளைஞரணி மாநாட்டுத் திடலில் யார் இருக்கிறார்கள், இல்லை என்பதை எல்லாம் பார்க்காமல் பொதுவெளியில் வைத்து அமைச்சர் நேரு அங்கிருந்த ஊழியரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி திமுக தலைமைக்கு தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இன்று அமைச்சர் நேருவை முந்திரிக்கொட்டை போல் எனக் கூறி சூசகமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே திமுகவில் உள்ள சார்பு அணிகளிலேயே சிறந்த அணி எதுவென்றால் அது இளைஞரணி தான் என்றும் இது யதார்த்த நிலை என்பதால் யாரும் தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என தாம் சொல்லியது போல் சித்தரித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவரது அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப்பிலேயே இந்த பொய் தகவலை பரப்பியதற்காக தாம் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications