மக்களிடம் சலித்துக் கொள்ளாதீர்.. பொறுமையா காது கொடுத்து கேளுங்க.. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கட்டளை..!
சென்னை: திமுக நிர்வாகிகள் எந்தக் காரணத்துக்காகவும் மக்களிடம் சலித்துக்கொள்ளக் கூடாது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார்.
Recommended Video

மக்கள் ஆதங்கப்படத்தான் செய்வார்கள் என்றும் நாம் தான் பொறுமையாக காது கொடுத்துக் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் குறைகள் களையப்படும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு திமுகவினர் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பொறுமை முக்கியம்
திமுக மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என அனைத்து மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஸ்டாலின், அதில் பல்வேறு அட்வைஸ்களை கூறியிருக்கிறார். குடிநீர் வசதியில்லை, ரேஷன் கடை இல்லை, போக்குவரத்து வசதி இல்லை என அடுக்கடுக்கான குறைகளை கிராமமக்கள் சொல்வார்கள் என்றும் அவர்கள் சொல்வது அனைத்தையும் பொறுமையாக கேட்பதுடன் சலிப்பை காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

நினைவுப்படுத்துக
கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை என்பதை கிராம மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து அடுத்ததாக ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம் என்ற உறுதியை திமுகவினர் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே திமுக ஆட்சிப் பொறுப்பில் அந்தந்த ஊர்களுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

திருமண விழா
மு.க.ஸ்டாலின் இந்த அறிவுறுத்தலை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நிர்வாகிகளும் தலையசைத்து ஏற்றுக்கொண்டனர். மேலும், உங்கள் வீட்டுத் திருமண விழாவுக்கு எப்படி வீடு வீடாக சென்று உறவினர்களை நண்பர்களை அழைப்பீர்களோ, அதைப்போல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களை வீடு வீடாக சென்று அழைக்க வேண்டும் என நிர்வாகிகளை ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

நம்மால் முடியும்
நம்மால் முடியும் நம்மால் மட்டுமே முடியும் என்பதை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மனதில் தாங்கிக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் 200 தொகுதிகளுக்கு குறையாமல் நாம் வெற்றிபெற வேண்டும் எனவும் ஸ்டாலின் உரையாற்றினார்.
-
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications