“தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை.. சாமானிய மக்களின் கதி என்ன?” - ஸ்டாலின் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை.. ரீல்ஸ் தான் எடுத்திருக்கிறார்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்தடைகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதனால் வீடுகள் மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Stalin Slams CM He Didn t Review at EB HQ He Was Shooting Reels Instead

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மின்வெட்டு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தவெக அரசின் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கலந்தாய்வுக் கூட்டத்தின்போது மின்தடை ஏற்பட்டது. மேலும், மதுராந்தகம் தொகுதியில், பிரச்சாரக் கூட்டங்களில் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்வுகளின்போதும் மின் தடை ஏற்பட்டது.

இதற்கிடையே, அண்மையில் சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் விஜய். இந்த ஆய்வின் போது மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் மின்சாரத்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பேசும்போது மின் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின் வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை. ரீல்ஸ்தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+