எங்களுக்கு வாரிசு இருக்கிறது! அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்கிறோம்! ஸ்டாலின் பேச்சு!
சென்னை: எங்களுக்கு வாரிசு இருக்கிறது, அதனால் கம்பீரமாக வாரிசு என்று சொல்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் இல்ல மண விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது;

ஈடு இணை கிடையாது
நன்றியுரையாற்றுகிற போது சுந்தர் சொன்னார், பல்வேறு சிரமங்களுக்கிடையிலே, பணிச்சுமைக்களுக்கிடையிலே நான் வந்திருப்பதாக. ஒரு தூய கழக செயல்வீரருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய மணவிழா நிகழ்ச்சிக்கு வருகின்ற போது, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஆடம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்கின்ற உணர்வோடு, நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

லட்சக்கணக்கான சுந்தர்கள்
ஒரு சுந்தர் அல்ல. லட்சக்கணக்கான சுந்தர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால்தான் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும், தொட்டு கூட பார்க்க முடியாது. 1989-ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டுதான் நானும் முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த வகையில் சுந்தர் என்னுடைய Batchmate என்று பெருமையோடு சொல்லலாம்.

பாழாகிப்போன நிதி நிலைமை
அதுவும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழாகிப்போன நிதி நிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் சீரழிவு, கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அந்தப் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் இன்றைக்கு நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

எங்களுக்கு வாரிசு
இங்கே மணக் கோலத்தில் வீற்றிருக்கக்கூடிய வெற்றிச்செல்வன் கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு, தற்போது சாலவாக்கம் பகுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுகூட வாரிசு, வாரிசு என்று சொல்வார்கள், எங்களுக்கு வாரிசு இருக்கிறது, அதை கம்பீரமாக வாரிசு என்று நாங்கள் சொல்கிறோம். அதுதான் குடும்பப் பாச உணர்வு. இதைத்தான் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை குடும்பப் பாச உணர்வோடு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications