மிசாவில் கைதான போது சைனஸால் அவதிப்பட்ட ஸ்டாலின்! சூப் வைத்து எடுத்துச் சென்ற தயாளு அம்மாள்!

ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறையில் இருந்த போது சைனஸ் பிரச்சனையால் அவதி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னையில் நிறுவப்பட்டுள்ள மிசா காலத்து சிற்ப காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மிசாவில் கைதாகி ஸ்டாலின் ஓராண்டு சிறையில் இருந்த போது அவர் மீது பூட்ஸ் கால்களால் காவலர்கள் நடத்திய தாக்குதலை தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மிசாவில் கைதாகி சிறையில் இருந்த போது சைனஸ் பிரச்சனையால் தாம் அவதிப்பட்டதையும், தன்னை பார்க்க மருத்துவமனைக்கு வரும் போது தனது தாயார் தயாளு அம்மாள் சூப் வைத்து எடுத்து வந்ததையும் அண்மையில் சென்னையில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் நினைவு கூர்ந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

மிசா காலம் பற்றி ஸ்டாலின் கூறியதன் விவரம் வருமாறு;

மிசாவில் கைது

மிசாவில் கைது

''இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டு 1976-ஆம் ஆண்டு திமுக ஆட்சி தமிழ்நாட்டில் கலைக்கப்பட்டு, மிசா சட்டம் வந்து அந்த மிசா சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் இருக்கக்கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது, ஒரு வருடம் இருந்தேன். நான் அந்தப் பிரச்சனைக்குள் அதிகம் போக விரும்பவில்லை. அப்படி சிறையில் இருந்தபோது எனக்கு E.N.T. பிரச்சனை வந்தது, சைனஸ் பிரச்சனை வந்தது. அப்போது சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு என்னைக் காவலர் பாதுகாப்போடு அழைத்துக் கொண்டு செல்வார்கள்.''

 சைனஸ் பிரச்சனை

சைனஸ் பிரச்சனை

''மருத்துவர் மோகன் காமேஸ்வரன் இருக்கக்கூடிய கட்டடத்திற்கு காவலர் பாதுகாப்போடு கொண்டு செல்வார்கள். நான் சிறையிலிருந்து பொது மருத்துவமனைக்கு வரக்கூடிய செய்தி என்னுடைய தாய்க்கு தெரிந்து என்னுடைய தாய், தங்கை, தம்பி என்னுடைய வீட்டிலிருந்து பலபேர் புறப்பட்டு என்னைப் பார்க்க வருவார்கள். மருத்துவமனைக்கு வரும்போது பார்க்கலாம் என்ற ஆர்வத்தோடு வருவார்கள். வரும்போது கையில் சிறிது சூப்-ஐயும் எனக்குக் கொடுப்பதற்காக என்னுடைய தாயார் எடுத்துக் கொண்டு வருவார்கள். ''

காவலர்கள் கண்டிப்பு

காவலர்கள் கண்டிப்பு

''சில நேரங்களில் சில காவலர்கள் தாராளமாக விட்டுவிடுவார்கள், ஆனால், சில காவலர்கள் விடமாட்டார்கள், மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள், அது அவர்களது கடமை. அப்படிப்பட்ட நேரங்களில், டாக்டர் காமேஸ்வரன் அவர்களைப் பார்ப்பதற்கு நான் அந்த அறைக்குச் செல்கிறபோது காவலர்களும் உள்ளே வருவார்கள். நோயாளியை நான் தனியாகப் பார்க்க வேண்டும், நீங்கள் வெளியில் இருங்கள் என்று காவலர்களை வெளியில் நிற்க வைத்துவிடுவார்.''

சூப் எடுத்துச் சென்ற தயாளு அம்மாள்

சூப் எடுத்துச் சென்ற தயாளு அம்மாள்

''அதற்கப்புறம் இவருடைய தனி அறை பின்புறம் இருக்கும், அங்கு என்னுடைய அம்மா இருப்பார்கள், அவர்களை அழைத்து சூப்-ஐக் கொடுங்கள் என்பார், அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.'' இவ்வாறு தனது மிசா காலத்து அனுபவங்களை பகிர்ந்திருந்தார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+