லிஸ்ட் ரெடி.. மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவை எவை? ஜூன் 3ல் வெளியாகிறது அறிவிப்பு?
சென்னை : தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் 500 மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 3ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,329 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்சிகளின் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.
அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், மூடப்படும் மதுபானக் கடைகளின் பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் தயார் செய்து வந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், கோயில்களுக்கு அருகே உள்ள 500 மதுபானக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, மூடப்படும் 500 கடைகளை அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்து, பட்டியல் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு அறிவிப்பு வெளியாக உள்ளது.
எந்தெந்த கடைகள் மூடப்படும் என்பது குறித்த அறிவிப்பை வரும் ஜூன் 3ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications