தேதி குறிச்சாச்சு! Jaguar Land Rover கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை மற்றும் மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கு வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருக்கிறார். இந்த இரண்டு புதிய ஆலைகள் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் கிடைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அண்மையில் 17 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்துத் திரும்பினார். 9 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 7, 8 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, இதுவரை இல்லாத அளவில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு மற்றும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு - டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. 400 ஏக்கரில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமையவுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 28 ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். ஜாகுவார், ரேஞ்ச்ரோவர், லேண்ட் ரோவர் போன்ற உயர் ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் சொகுசு கார்களின் முன்னணி உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் மாற உள்ளது.
தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களையும் இந்த புதிய தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, விரைவாகவே தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் தோல் மற்றும் காலணி உற்பத்தியை சர்வதேச தரத்தில் உயர்த்தி, 20 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் நோக்கில், பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமையவுள்ளது. இந்த ஆலைக்கும் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications