எண்ணம் எல்லாம் அபிநந்தன் குடும்பம் மீதே உள்ளது… மத்திய அரசு மீட்க ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: விமானி அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால கோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.
இதுகுறித்து விவரித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்தது. இந்த சம்பவம் இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு
விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் தொடங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி... நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் டுவிட்டர்
இதனைத் தொடர்ந்து அபினந்தனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை
அதில் விமானி அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
|
அபிநந்தன் எண்ணம்
"எனது எண்ணமெல்லாம் அபிநந்தனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருக்கிறது. இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications