சிக்கிமை தொடர்ந்து தமிழக முதல்வர் செய்த காரியம்.. பிபிஇ கிட்டுடன் ஸ்டாலின்.. டிரென்டாக்கும் மக்கள்!
சென்னை: சிக்கிம் முதல்வருக்கு அடுத்தபடியாக பிபிஇ கிட்டுடன் முதல்வர் ஸ்டாலின், கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தது இன்றும் டிரென்டிங்கில் உள்ளது.
கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் கூட்டணிகளுக்கு சீட்டு ஒதுக்குவது முதல் வேட்பாளர் தேர்வு வரை, பதவியேற்பு முதல் அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தது முதல் அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் கவனத்துடனே அவர் எடுத்து வைத்து வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னைக்கு பிறகு கோவை உள்ளது. நேற்றைய தினம் அதிக தொற்றுகளுடன் இடம்பிடித்து சென்னையை பின்னுக்கு தள்ளியது கோவை.

ஆய்வு
இந்த நிலையில் கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்ய சென்ற ஸ்டாலின் திடீரென பிபிஇ கிட் அணிந்து கொண்டு கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அவரது வயதை சிறிதும் பொருட்படுத்தாமல் பிபிஇ கிட் அணிந்து கொண்டு சர்வ சாதாரணமாக கொரோனா வார்டு சென்றது நோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

டிவிட்டர்வாசிகள்
அரசு எப்போதும் மக்களின் பக்கம்தான் என்பதை நிரூபித்துள்ளது. நேற்று முதல் #WeStandWithStalin எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது. எந்த தலைவரும் செய்ய துணியாத காரியத்தை ஸ்டாலின் செய்துள்ளதாக டிவிட்டர்வாசிகள் கொண்டாடி வருகிறார்கள். என்னதான் சிக்கிம் முதல்வர் சனிக்கிழமை அன்று பிபிஇ கிட்டுடன் கொரோனா வார்டுக்கு சென்றாலும் அங்கு கேஸ்கள் குறைவாகவே உள்ளதாலும் ஆனால் தமிழகத்தில் ஸ்டாலின் சென்ற கோவை மாவட்டத்தில் கேஸ்கள் அதிகரித்து வருவதாலும் ஸ்டாலினை கொண்டாடுகிறார்கள்.

கவலை
அதே நேரம் அவரது வயதை கருத்தில் கொண்டு கவலையும் தெரிவித்து வருகிறார்கள். இவரை போல் ஓர் முதல்வரை தமிழகம் இதுவரை கண்டதில்லை. கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்து போராடும் மருத்துவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவே சென்றார்.

டிரென்டிங்
தொடர்ந்து டிவிட்டரில் டிரென்டிங்கில் இருக்கிறது. இதுதான் தமிழக மக்களின் ஆற்றல்.

முதல்வன் பட முதல்வர்
நம் முதல்வர் முதல்வன் படத்தில் வருவது போன்ற முதல்வர்

பாதுகாவலர்
தமிழகத்தின் புதிய எடுத்துக்காட்டு
அவரது பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
பாதுகாவலரின் கையில் தமிழகம்

எடுத்துக்காட்டான ஸ்டாலின்
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய ஸ்டாலின். அவருடைய மாநில மக்களை எப்படி பாதுகாக்கிறார் பாருங்கள்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்











Click it and Unblock the Notifications