இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் உள்ளாட்சியில் பூசலும், அதிரடி நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. தேர்தலில் எதிர்பாராத படுதோல்வியைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, மாஜி அமைச்சர் எ.வ.வேலு மீது ஸ்டாலின் தொலைபேசியில் வெடித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "உன் நேரடி கண்ட்ரோலில் 65 தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி. இந்த லட்சணத்தில் அடுத்த பொதுச்செயலாளர் பதவி கேட்கிறாயா?" என்று ஸ்டாலின் கடுமையாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த எ.வ.வேலு பதிலேதும் சொல்ல முடியாமல் திணறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எ.வ.வேலுவுக்கு மட்டுமல்லாமல், கட்சியின் பல மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் ஸ்டாலின் தனித்தனியாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தின் தோல்விக்கான காரணங்கள், உள்ளடி வேலைகள், அலட்சியம், வாக்கு மாற்றங்கள் ஆகியவற்றை துல்லியமாக சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் களத்தில் சரியாக வேலை செய்யாமல், தலைமைக்கு மட்டும் நல்ல பெயர் வாங்க முயன்ற மூத்த நிர்வாகிகளின் முகமூடிகளை இந்த போன் கால்கள் மூலம் ஸ்டாலின் கிழித்தெறிந்துள்ளதாக அடிமட்ட தொண்டர்கள் வரவேற்றுப் பேசத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக பலர் ஸ்டாலினிடம் உண்மையான தகவல்களை மறைத்து உள்ளனர். தங்களுக்கு கிடைத்த சில முக்கியமான தலைமைக்கு கொடுக்காமல் இவர்கள் ஏமாற்றி உள்ளதாக ஸ்டாலினுக்கு மெசேஜ் சென்றுள்ளது. இதை எல்லாம் ஆதாரத்தோடு காட்டி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். என்னை இந்த முக்கியமான விஷயத்தில் எல்லாம் ஏமாற்றிவிட்டீர்களே என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், தேர்தல் செலவுகளுக்காக மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் குவிந்துள்ளன. இதுகுறித்து ஸ்டாலின், "கொடுத்த பணத்திற்கு முறையான கணக்குகளை உடனடியாக சமர்ப்பிக்கவும். பொய் தகவல்கள் இருந்தால் நான் நானாக இருக்க மாட்டேன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவங்கள் திமுகவின் உயர்மட்டத்தில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராயும் பணி தீவிரமடைந்துள்ளது. விரைவில் பெரிய அளவிலான உட்கட்சி மாற்றங்கள், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், தோல்விக்கு காரணமான அமைச்சர்களின் பதவி பறிப்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் இந்த தேர்தல் தோல்வி, கட்சிக்குள் ஒரு பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த உள்ளடி பிரச்னைகள் இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. அறிவாலயத்தில் அடுத்து என்ன அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நோக்கி கட்சி வட்டாரங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில், திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது. சிலர் ஸ்டாலினின் ஆக்ரோஷமான அணுகுமுறையை வரவேற்கும் நிலையில், மற்ற சிலர் உட்கட்சி பூசல் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications