எடப்பாடியை "பணிய" வைக்க ஸ்டாலின் போடும் கணக்கு: சபாநாயகர் அஸ்திரத்தை வைத்து ஓபிஎஸ்ஸை வளைக்கிறாரா?
சென்னை: தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயமாக, ஓபிஎஸ்ஸுக்கு திமுக கூட்டணியில் சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தி சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது... அப்படி பதவி தந்தால், அதனால் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? அரசியல் களத்தில் ஏற்படும் அதிர்வலைகள், தாக்கங்கள் என்னென்ன?
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தனி அமைப்பை நடத்தி வரும் ஓபிஎஸ் வரவிருக்கும் தேர்தல் சூழலை கருத்தில் கொண்டு திமுக மேலிடத்துடன் இணக்கமாகி விட்டார்..

இதையடுத்து திமுக தரப்பில் சில முக்கிய நிபந்தனைகளுடன் கூடிய சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இந்த தகவல்கள் அதிமுகவின் தற்போதைய தலைமைக்கு எட்டியுள்ள நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
ஒருவேளை திமுகவின் பிளான்கள் நிறைவேறி, ஓபிஎஸ் சபாநாயகராக பொறுப்பேற்றால், அது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான மாற்றமாக அமையும் என்றே தெரிகிறது..
ஓபிஎஸ் சபாநாயகராக உட்காருவது திமுகவிற்கு அரசியல் ரீதியாக சில பலன்களை தரக்கூடும்... குறிப்பாக, அதிமுகவின் வலுவான தலைவராக நீண்ட காலம் இருந்த ஒருவரை சபாநாயகர் நாற்காலியில் அமர்த்துவதன் மூலம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை தார்மீக ரீதியாக பலவீனப்படுத்த முடியும் என்று திமுக தலைமை கணக்கு போடுவதாக தெரிகிறது.
சபாநாயகர் பதவி
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சபாநாயகர் பதவி என்பது மிகவும் முக்கியமானது.. அனுபவம் வாய்ந்த ஒருவரை அந்த இடத்திற்கு கொண்டு வருவது அவையை சுமூகமாக நடத்த உதவும் என்று கருதலாம். மேலும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களுக்கு இது ஒரு அரசியல் அங்கீகாரமாகவும், திமுகவுடனான உறவை வலுப்படுத்துவதாகவும் அமையும்.
ஆனால் இதில் சில சங்கடங்களும் நிறைந்துள்ளன.. சபாநாயகர் பதவி என்பது நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஒரு பொறுப்பு. ஓபிஎஸ் போன்ற தீவிர அரசியல் பின்னணி கொண்ட ஒருவர் அந்த பதவிக்கு வரும்போது, அவரது முடிவுகள் நடுநிலையோடு இருக்குமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது... இது கண்டிப்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு வழிவகுக்கும்.
எடப்பாடிக்கு பின்னடைவு
அதேபோல், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும். தங்களது முன்னாள் கட்சியின் முக்கிய தலைவர், தங்களுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சியுடன் இணைந்து சபாநாயகர் நாற்காலியில் உட்காருவதை அவர்களால் எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
எடப்படி பழனிசாமியை பொறுத்தவரை, சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகராக இருக்கும்போது, அவர் முன் மரியாதை செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.. இது அதிமுகவிற்குள் இருக்கும் கசப்பான சூழலை மேலும் அதிகப்படுத்தும்.
அரசியல் ஆதாயம்
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஓபிஎஸ் சபாநாயகராக பொறுப்பேற்பது திமுகவிற்கு அரசியல் ஆதாயத்தை தந்தாலும், அது எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வரவிருக்கும் நாட்களில் இந்த விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது... உண்மையிலேயே ஓபிஎஸ்ஸுக்கு சபாநாயகர் போஸ்ட்டிங் வரப்போகிறதா? உறுதியாக தெரியவில்லை.. இது குறித்து திமுக அல்லது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications