Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்பிஐ பேங்க்கில் அக்கவுண்ட் இருக்கா? SBI வங்கி கணக்கை எப்படி துவங்குவது? இதெல்லாம் ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்பிஐ வங்கியில் உங்களுக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கிறதா? புதிதாக வங்கி கணக்கை எப்படி தொடங்கலாம் தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழும் பாரத ஸ்டேட் வங்கியானது, தன்னுடைய அபரிமிதமான சேவையால், ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.. தன்னுடைய கஸ்டமர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்லைன் சேவைகளையும் எஸ்பிஐ வழங்கி வருகிறது.

State Bank of India and Do you know how to SBI Bank Account Open through online what are the Benefits

அந்தவகையில், எஸ்பிஐயில் வங்கி கணக்கு துவங்குவது முதல் வங்கி கணக்கை டிரான்ஸ்வர் செய்து கொள்வதுவரை, ஆன்லைனிலேயே வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.. எனவே, 5 நிமிடத்திலேயே கணக்கை நீங்கள் எஸ்பிஐ-யில் துவங்கலாம்.

நிபந்தனைகள்: எஸ்பிஐ வங்கியில் முதன்முதலில், கணக்கு துவங்குவதற்கான தகுதிகள், நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா? விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.. பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மைனருக்கான கணக்கை திறக்கலாம்.

எஸ்பிஐ கணக்கு திறக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன ? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு படிவம் 16 (பான் கார்டு இல்லை என்றால்) 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.

கணக்குகள்: எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைந்து, "கணக்குகள்" என்பதைக் கிளிக் செய்து சேமிப்பு கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்..

இப்போது, விண்ணப்பப் படிவத்தில், பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களைப் பூர்த்தி செய்து "சமர்ப்பி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.. இந்த செயல்முறை முடிந்ததும், தேவையான KYC ஆவணங்களுடன் கிளைக்குச செல்ல வேண்டும், சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்பட்டு 3 முதல் 5 நாட்களில் கணக்கு செயல்படுத்தப்படும்.

அதேபோல, உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், அதனை ஆன்லைனிலேயே நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். ஆன்லைனிலேயே ATM கார்டுகளையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.. ஒருவேளை உங்களுடைய செல்போன் நம்பர் மாறிவிட்டால், ஆன்லைனிலேயே வங்கி கணக்கில் புது எண்ணை இணைக்க முடியும்...

மிஸ்டு கால்: அதுமட்டுமல்ல, பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 09223766666 என்ற இலவச எண்ணை வழங்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்களது எஸ்பிஐ கணக்கில், இருப்பு தொடர்பான தகவல்களை பெற விரும்பினால், 09223766666 என்ற இலவச எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும். சில வினாடிகளுக்கு பிறகு, முழுமையான தகவல் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+