நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. மதிமுக & அமமுக கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக மற்றும் மதிமுக கட்சிகளுக்குச் சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியுடன் களமிறங்கும் நிலையில், அதிமுக, பாஜக பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தேர்தலில் களமிறங்குகின்றன.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சில பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு செய்வதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக மற்றும் மதிமுக கட்சிகளுக்கு சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னமும் மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications