நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. மாநில தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை நிரப்ப நடைபெற்ற இந்தத் தேர்தலில், ஆங்காங்கே சிறுசிறு பூசல்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.
சிறு பூசல்கள் நடந்த சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் சமயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் காணொலி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications