தமிழகத்தை உலுக்கிய கொடுங்கையூர் லாக்அப் மரணம் - களத்தில் இறங்கிய மாநில மனித உரிமை ஆணையம்
சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருக்கிறது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் ராஜசேகர். கொடுங்கையூர் போலீசார் வழக்கு ஒன்றுக்காக கடந்த 11 ஆம் தேதி இரவு கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்று மாலை திடீரென ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு கொடுங்கையூர் போலீசார் அழைத்துச் சென்றனர்.

கைதி மரணம்
ஆனால், கைதி ராஜசேகரின் உடல்நிலை மோசமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

பல வழக்குகள்
உயிரிழந்த ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகள், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகள், எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகள், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் என 23 வழக்குகள் உள்ளன.

போலீசார் பணியிடை நீக்கம்
ராஜசேகர் லாக் அப் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

மாநில மனித உரிமை ஆணையம்
இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் லெட்சுமி தலைமையில் விசாரணை தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் கொடுங்கையூர் கைதி ராஜசேகர் லாக் அப் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. 4 வாரங்களில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
"மதம் மாறினால் பதவி உயர்வு!" நாசிக் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு கொடுமை.. அமைச்சர் ஆவேசம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications