தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பேயில்ல ராஜா... மாநில கட்சிகளே வெல்லும்... சீமான் பொளேர்!
Recommended Video

சென்னை : கருத்துக்கணிப்பு மூலம் வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை உருவாக்குகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்பது நேற்று வெளியான ஏபிபி சி வோட்டர் சர்வே, இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் சர்வே, ரிபப்ளிக் டீவி சர்வே ஆகிய கருத்து கணிப்புகளில் இருந்து தெளிவாகி உள்ளது.

மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், இப்போதே நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. தொடர்ந்து வரிசையாக நிறைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்: வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை கருத்துக்கணிப்பு மூலம் உருவாக்குகிறார்கள்.
மக்களவை தேர்தலில் மாநில கட்சிகள்தான் அதிக இடங்கள் வெல்லும் என்றும், மாநில கட்சிகள்தான் மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
