மாநாடுக்கு எதிராக பொங்கிய வேலூர் இப்ராஹீம்; ஆஃப் செய்த அண்ணாமலை; இது தான் பின்னணி!
சென்னை: திரைப்படம் தொடர்பான விமர்சனங்களை தவிர்க்குமாறு பாஜகவினருக்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியதன் பின்னணியில் மாநாடு படம் இருப்பதாக கூறப்படுகிறது.
மாநாடு படத்தின் இயக்குநர் வீட்டை முற்றுகையிடுவோம் என வேலூர் இப்ராஹீம் எச்சரித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பூட்டை போட்டுவிட்டார் அண்ணாமலை.
இதற்கு காரணம் மாநாடு படத்தின் இயக்குநரான வெங்கட்பிரபுவின் தந்தையும், பாஜக முக்கியப் பிரமுகருமான கங்கை அமரனை கைக்காட்டுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வீடுகளுக்கு முன்பு
நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்துக்கு பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி வேலூர் இப்ராஹீம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நடிகர் சிம்புவின் இல்லம் முன்பும் இயக்குநர் வெங்கட்பிரபுவின் வீடு முன்பும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தார் அவர். இதனை கட்சி தலைமையின் அனுமதியோடு அவர் தெரிவித்தாரா அல்லது தன்னிச்சையாக கூறினாரா என்ற விவரம் தெரியவில்லை.

கங்கை அமரன்
ஆனால், பாஜகவில் கலை இலக்கிய அணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இயக்குநர் கங்கை அமரன் இதனை பேச வேண்டிய இடத்தில் பேசி ஆரம்பத்திலேயே சர்ச்சையை ஆஃப் செய்ய வைத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாடு திரைப்படத்தை இயக்கியது கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு என்பது கவனிக்கத்தக்கது. இதன் பின்னணியில் தான் திரைப்படம் சார்ந்த கருத்தை தவிர்க்க வேண்டும் என அறிக்கையே வெளியிடப்பட்டதாக காரணம் கூறப்படுகிறது.

சர்ச்சைகள்
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை தற்போது ஓயத்தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சர்ச்சை ஒன்றை பாஜக சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹீம் கிளப்பவிருந்தார். இந்நிலையில் அதற்கு அவரது சொந்தக் கட்சியே அணை போட்டு நிறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. எதைப் பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்ற நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனத்தை சுட்டிக்காட்டி வேலூர் இப்ராஹீமை சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை அறியமுடிகிறது.

போராட்டம்
இதனிடையே எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளை சீண்டும் வகையில் வேலூர் இப்ராஹீம் சில வார்த்தைகளை உதிர்த்திருந்ததால் அவரை கண்டித்து அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications