சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: அதிமுக அதிரடி.. 11ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல்

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி கூட்டணிகள் இறுதி செய்யப்படுவதால், தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன.

மற்றொரு பக்கம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், பிரபல நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் வாழ்வு என பிற கட்சிகள் எண்ணுகின்றன என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது கூட்டணி கட்சிகள் நடுவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக அனல் பறக்கிறது தமிழக அரசியல். உடனுக்குடனான அரசியல் தகவல்களுக்கு இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Newest First Oldest First
5:17 PM, 8 Mar

அதிமுக வேட்பாளர்கள் நேர் காணல் 11ம் தேதி தொடக்கம்

11, 12ம் தேதி இரு நாட்கள் வேட்பாளர் நேர்காணல்

3:01 PM, 8 Mar

தேமுதிக குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தயார் இல்லை- ஸ்டாலின்

ஆவணங்களை பாதுகாக்க முடியாத மோடி இந்தியாவை எப்படி பாதுகாக்கப்போகிறார்-ஸ்டாலின்

துரைமுருகனிடம் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வரும் என அதிமுகவுக்கு அச்சம்

1:22 PM, 8 Mar

நிருபர்களிடம் ஒருமுறையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

நிருபர்கள்-பிரேமலதா விஜயகாந்த் நடுவே கடும் வாக்குவாதம்

1:11 PM, 8 Mar

திமுகவுடன் நாளை காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை
1:10 PM, 8 Mar

எதிரியாக இருந்தாலும் வரவேற்பதுதான் தமிழர் பண்பாடு

துரைமுருகன் நடந்து கொண்டது சரியில்லை- பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

1:10 PM, 8 Mar

அ.ம.மு.க கூட்டணியில் தமிழர் வாழ்வுரிமை கட்சி?
1:09 PM, 8 Mar

அதிமுக கூட்டணி மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை கொண்டுள்ளது - கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் ஊழல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது - கே.எஸ்.அழகிரி

எந்தெந்த தொகுதி என்பது குறித்து திமுகவுடன் நாளை பேச்சு - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை - கே.எஸ். அழகிரி

1:08 PM, 8 Mar

சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

2 நாட்களுக்குள் தேமுதிக கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்

10:33 AM, 8 Mar

அதிமுக தேர்தல் அறிக்கை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது

பொன்னையன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கையை தயாரித்து இருந்தது

9:55 AM, 8 Mar

காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

காவல்துறையினர் தலையிட்டு கூட்டத்தை கலைத்ததால் தள்ளுமுள்ளு

9:54 AM, 8 Mar

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்று தேமுதிகவினர் போராட்டம்

velmurugan

English summary
Please stay with this live page to know Tamilnadu political news ahead of Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X