இந்தியர் ஒருவர் எடுத்த முடிவால்.. மொத்த இங்கிலாந்தும் அரண்டு நிற்குதே.. யோசித்து கூட பார்க்காத யு.கே
லண்டன்: சுமார் 30 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்த இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மிட்டல், இங்கிலாந்தை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். மிட்டல் எடுத்த இந்த முடிவால் இங்கிலாந்து நாடு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரைப்போலவே இன்னும் பலர் இதே போன்ற முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் தொழிலாளர் அரசு கொண்டு வரவுள்ள புதிய வரி விதிப்பு கொள்கைகள் இதற்கு முக்கிய காரணம். உலகளாவிய செல்வந்தர்களை இலக்காகக் கொண்டு இந்த வரி மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.
ராஜஸ்தானில் பிறந்த லட்சுமி மிட்டல், தற்போது வரி செலுத்தும் நாடாக சுவிட்சர்லாந்தைக் கொண்டுள்ளார். இருப்பினும், இனி தனது வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை துபாயில் செலவிட அவர் திட்டமிட்டுள்ளார்.

லட்சுமி மிட்டல்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எஃகு தொழில் அதிபரான லட்சுமி மிட்டல், UKன் வரி கொள்கையில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றத்தைத் தொடர்ந்து, அந்நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்த எஃகு சாம்ராஜ்யத்தின் அதிபர் மிட்டல், சுவிட்சர்லாந்திற்கு வரி வசிப்பிடத்திற்காக மாறுவதாகவும், தனது பெரும்பாலான நேரத்தை துபாயில் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது.
அந்நாட்டு அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த "நான்-டொமிசைல்" (non-dom) வரிச் சலுகையை ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரிய பொருளாதார வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த வரிசலுகையை அந்நாட்டு அரசு நிறுத்த முடிவு செய்துள்ளது.
வரி இல்லை - இனி சலுகை கிடையாது
இந்தச் சலுகை, பணக்கார குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு இங்கிலாந்து வரி செலுத்துவதைத் தவிர்க்க அனுமதித்தது. புதிய விதிகளின்படி, இங்கிலாந்து குடியிருப்பாளர்களின் உலகளாவிய சொத்துக்களுக்கும் வரி பொருந்தும். அதோடு இதற்கு வாரிசு வரியும் பொருந்தும். அதாவது இங்கிலாந்தில் உள்ளவர்கள் அவர்களின் வெளிநாட்டு சொத்துக்களுக்கும் வரி செலுத்த வேண்டும். கூடுதலாக வாரிசு வரியும் செலுத்த வேண்டும். இந்த மாற்றம் தான் மிட்டலின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம்.
மிட்டலுக்கு நெருக்கமான வட்டாரங்கள், வருமானம் அல்லது மூலதன ஆதாய வரி பற்றி அவருக்கு கவலை இல்லை என்றும், குறிப்பாக வாரிசு வரி பற்றியே அதிகம் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். வாரிசு வரி காரணமாக அவர் பல கோடிகளை வருடா வருடம் செலுத்த வேண்டும். இதை அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் வாரிசு வரி 40% வரை உயரலாம், ஆனால் சுவிட்சர்லாந்து மற்றும் துபாய் போன்ற நாடுகளில் வாரிசு வரி மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ உள்ளது.
மிட்டல் முடிவால் இங்கிலாந்து ஷாக்
மிட்டல் எடுத்த இந்த முடிவால் இங்கிலாந்து நாடு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மிட்டல் ஏற்கனவே துபாயில் ஒரு மாளிகையை வைத்திருக்கிறார், மேலும் நாசியா தீவில் நிலத்தில் முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவரை போல இன்னும் பலர் இதே முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது, நீண்டகாலமாக வசித்து வந்தவர்களும் கூட, இங்கிலாந்து இந்த வரி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications