தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஸ்டெர்லைட் ரூ.5 கோடி.. நன்கொடையாளர் லிஸ்ட் இதோ
சென்னை: ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக முதல்வர், பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள், மற்றும் பொதுமக்களிடம் இருந்து 13-4-2020 வரை மொத்தம் ரூ.134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரை பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 14ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஏழு நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் மனமுவந்து நிதி உதவி வழங்கியவரின் விபரங்கள்:
- ஸ்டெர்லைட் காப்பர் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி- 5 கோடி ரூபாய்
- சுந்தரம் பாஸ்ட்னார்ஸ் நிறுவனம்- 3 கோடி ரூபாய்
- ஐடிசி எஜுகேஷன் - 2 கோடி ரூபாய்
- தி சன்மார் குரூப் - 1 கோடி ரூபாய்
- ஆச்சி மசாலா புட்ஸ் நிறுவனம் - 1 கோடியே 10 லட்சம் ரூபாய்
- தமிழ்நாடு அரசு e-payments - 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்
- தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் - 77 லட்சத்து 30 ஆயிரத்து 543 ரூபாய்
- இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை - 64 லட்சத்து 74 ஆயிரத்து 852 ரூபாய்
- கிரிஸ்டி ப்ரைட் கிராம் நிறுவனம் - 50 லட்சம் ரூபாய்
- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை- 31 லட்சம் ரூபாய்
- தி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் - 31 லட்சம்
இவ்வாறு அந்த பட்டியல் நீளுகிறது. மேற்கண்ட 7 நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரை பெற்றுள்ளது.
இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சம் 74 ஆயிரத்து 572 ரூபாய். இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசு ஆதரவு அளித்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு, செய்தி மக்கள் தொடர்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications