திடீரென சாய்ந்த சென்னை மெட்ரோ ரயில் தூண் கம்பிகள்.. பதறிய பூந்தமல்லி.. உடனடியாக வந்த 2 கிரேன்கள்!
சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வரும் 30 அடி உயர தூணின் கம்பிகள் பாரம் தாங்காமல் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அபாயத்தை உணர்ந்து, சாய்ந்த கம்பிகளை மீண்டும் நிலைநிறுத்த 2 ராட்சத கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, ரூ. 63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தடங்களைக் கொண்ட மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூவிருந்தவல்லி வரை (26.1 கி.மீ) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழிதடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டுப்பட்டு வரும் 30 அடி உயர தூணின் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கம்பிகள் கட்டப்பட்டு, கட்டுமானப் பணி நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று காற்று அதிகம் வீசியபோது திடீரென கம்பிகள் மொத்தமாக வளைந்ததாக கூறப்படுகிறது.
கம்பிகள் திடீரென வளைந்து தொங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் குமணன்சாவடி சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அபாயத்தை உணர்ந்து சாய்ந்த கம்பிகளை நிலைநிறுத்த 2 ராட்சத கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கம்பிகளை நிமிர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications