Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை திநகரில் கார் கண்ணாடியை திறந்து கூச்சலிட்டு உதவி கேட்ட பெண்.. போலீஸையே அதிர வைத்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தியாகராய நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை உணர்த்தியுள்ளது நடந்த சம்பவம்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அண்மையில் 10ம் வகுப்புதேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற 3 பேருமே பெண்கள் ஆவர். மாநில அளவில் மட்டுமல்ல, பல மாவட்டங்களில் மாவட்ட அளவிலும் மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.

Strange in the case of alleged abduction of a young woman in a car in T Nagar Chennai

இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பசுல்லா சாலை சிக்னலில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி சில்வர் கலர் கார் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அந்தக் காரில் இளம் பெண் ஒருவர் திடீரென ஜன்னலை திறந்து உதவி கேட்டார். இதை பார்த்த மக்கள் சிறுமி கடத்தப்பட்டுள்ளார் என்றும், அவர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்புவதாகவும் கருதி உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்கள்.

இதையடுத்து சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் ஆல்டர் நேரடியாக இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அந்த காட்சியில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து உடனடியாக விசாரணை மேற்கொண்டார்.

அதில், சம்பந்தப்பட்ட வாகனம் சாலிகிராமம் நவநீதம்மாள் தெருவில் நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று காரின் உரிமையாளரான மகேந்திரனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் சிறுமி கடத்தப்படவில்லை என்பது சிறுமி கேலிக்காக செய்த செயல் என்பதும் , பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், " திநகரில் மே 14ம் தேதி அன்று சென்ற காரின் உரிமையாளரான மகேந்திரன் சகோதரருடைய 15 வயது மகள் 10 - ம்‌ வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக சிறுமியுடன் குடும்பத்தினர் அனைவரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜூஸ் கடைக்கு 2 காரில் சென்றுள்ளார்கள். அங்கு ஜூஸ் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.

அப்போது சிறுமியை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி காரில் உள்ள அனைவரும் கேலி செய்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த சிறுமி கேலி செய்வதை நிறுத்துவதற்காக வேடிக்கையாக உதவி கேட்டு கூச்சலிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த பொதுமக்கள், இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக தவறாக நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனை விசாரணையில் அறிந்த அசோக் நகர் காவல் உதவி ஆணையர் ஆல்டர் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்" எனறு போலீசார் கூறினார்கள்.

10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை உறவினர்கள் ஜாலிக்காக கேலி செய்ததால் கார் கண்ணாடியை திறந்து உதவி கேட்டு சிறுமி கூக்குரல் எழுப்பியது பெரிய அளவில் சென்னை திநகரில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+