அட்டை பெட்டியை உடம்பெல்லாம் கட்டிக்கொண்டு வந்த அரசு பஸ் கண்டக்டர்.. ஒரு கூண்டு இங்கே கவசமானது.. ஏன்
சென்னை: அரசு பஸ்ஸில் பயணம் செய்த தீபக் என்பவரின் தற்கொலையும், அது தொடர்பான விசாரணையும் துரிதமாக கேரளாவில் நடந்து வருகிறது.. சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனுவும் தரப்பட்டுள்ளது.. இதற்கு நடுவில் கேரள பேருந்துகளில் எடுக்கப்பட்ட வித்தியாசமான வீடியோக்கள், தற்போது சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. அது என்ன தெரியுமா?
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக்.. 42 வயதாகிறது.. திருமணமானவர்... ஆனால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது..

கோழிக்கோட்டில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார் தீபக்.. கடந்த 9-ந் தேதி கண்ணூருக்கு அரசு பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்..
கேரளா பேருந்து சம்பவம்
அப்போது பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்ஸின் நடுப்பகுதியில் தீபக் நின்று கொண்டிருந்தார்.. அவருக்கு அருகில் சில பெண்களும் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது 35 வயது ஷம்ஜிதா முஸ்தபா என்ற பெண்ணும் அதே பஸ்ஸில் வந்தார்..
பயணத்தின்போது தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டி, அவரது போட்டோவுடன் கூடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷம்ஜிதா வெளியிட்டார். .. அதில், "தீபக் அவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டினார்... மேலும், அவரது தொடுதல் தற்செயலாக நடந்ததல்ல, பாலியல் வரம்பை மீறியது என்றும் ஷிம்ஜிதா கூறியிருந்தார்.
நீதிமன்ற காவலில் பெண்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
எனவே நடந்த சம்பவம் தொடர்பாக வடகரா போலீசார் தீபக்கை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது..
இதற்கு பிறகு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே இதை பற்றி தீபக்கிடம் விசாரித்ததாக தெரிகிறது. இதனால் அவமானமும் வேதனையும், மன அழுத்தமும் ஏற்பட்டதால் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.. இது தொடர்பாக ஷம்ஜிதா கைதாகி உள்ளார்.. தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலிலும் உள்ளார்..
தீபக் - ஷம்ஜிதா
இன்ஸ்டாகிராமில் வீடியோ வைரல் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய மகன் மீது அபாண்டமாக பழி சுமத்தி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக தீபக்கின் தாய் கன்யகா குற்றம்சாட்டி உள்ளார்..
ஆனால் ஷம்ஜிதா வெளியிட்ட வீடியோவை பற்றி, சோஷியல் மீடியாவில் இரு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன..
பஸ்ஸில் தீபக்கை நோக்கி நெருங்கி சென்று நிற்பது அந்த பெண்தான் என்றும், தனக்கு நியாயம் கிடைக்கவேண்டுமானால், சம்பந்தப்பட்ட பெண், இந்த வீடியோவை, சமூக ஊடகங்களில் பதிவு செய்வதற்கு பதிலாக, போலீசுக்கு போயிருக்க வேண்டியதுதானே? என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
பெண்ணை குற்றம் சொல்வது சரியா?
ஆனால் மற்றொரு சாரார், ஷம்ஜிதாவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.. ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாலேயே, அவர் மீது நியாயம் உள்ளதாக கூற முடியாது.. ஷாஜிதா தொடர்பான விவகாரத்தில், சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் கூறி வருகிறார்கள்..
அந்தவகையில் இணையத்தில் இந்த விவகாரம், மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது..
எனினும், எந்த விவகாரமாக இருந்தாலும் சரி, குற்றம் என்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படும் வரை, எந்தவொரு தனிநபர் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல.. எனவே இந்த விவகாரத்தில் காவல்துறையும், நீதிமன்றமும்தான் உண்மையை வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அட்டை பெட்டிகளுடன் ஆண் பயணிகள்
ஆனால், ஷம்ஜிதா வெளியிட்டிருந்த வீடியோவானது, வேறு சில எதிர்பாராதத தாக்கங்களையும் கேரளாவில் ஏற்படுத்தி உள்ளது.. குறிப்பாக, கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பஸ்களில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. இது தொடர்பான ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன...
பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்த்துவதற்காகவே, இந்த ரீல்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன..
அதில் ஒரு வீடியோவில், அட்டை பெட்டியையே கூண்டு போல வைத்து, அதற்குள் ஆண் பயணிகள் பயணம் செய்கிறார்கள்... அதாவது தங்களின் முழு உடம்பையும் அட்டைப் பெட்டியால் மறைத்து கொண்டு பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள்..
அரசு பஸ் கண்டக்டரே
இன்னொரு வீடியோவில் பஸ் கண்டக்டர் ஒருவரே இப்படியான அட்டை பெட்டியை கட்டி கொண்டு, பயணிகளுக்கு டிக்கெட் தருகிறார்.. தன்னுடைய நெஞ்சு பகுதி, கைகள் என பெரும்பாலான இடங்களில் அட்டை பெட்டிகளை கட்டிக்கொண்டு, பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கிறார். அவர் தன்னை சுற்றிலும் கட்டிவந்த அட்டையில். ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
கண்டக்டர் முதல் ஆண் பயணிகள் வரை மேற்கொண்டுள்ள இந்த வித்தியாசமான செயல்களும், அவர்களின் கோரிக்கை அடங்கிய வாசகங்களும், கேரளாவில் மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன..!!












Click it and Unblock the Notifications