நாய்கள் ஜாக்கிரதை.. முதன்முறை கொள்ளை முயற்சியில் தப்பிய தனிஷ்க்! காப்பாற்றியதே தெருநாய்கள் தானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை தனிஷ்க் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கி உள்ளது. மதுரையைச் சேர்ந்த நிஷாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவருக்கு உறுதுணையாக இருந்த யூட்யூபர் மீனாட்சி நிசாந்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2 முறை கடைக்கு வாடிக்கையாளர் போல சென்ற நிஷாந்த் நோட்டமிட்டு பின்னர் கொள்ளையை அரங்கேற்றிருக்கிறார். இந்த நிலையில் முதன்முறை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிஷாந்த், நாய்கள் குறைத்ததால் அங்கிருந்து சென்றதும், 2வது முறையாக இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் கடந்த மாதம் 15ஆம் தேதி தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி ஊழியர்கள் கடையைத் திறந்தனர்.

Madurai Tanishq Robbery

அப்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிக் கிடந்ததுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மேலாளருக்குத் தகவல் தெரிவித்ததுடன், காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை நடைபெற்ற பகுதியில் தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நவம்பர் 1ஆம் தேதி கையில் கட்டுப் போட்டபடியும், 2ஆம் தேதி தொப்பி அணிந்தபடியும் வாடிக்கையாளரைப் போல இயல்பாக நகைக்கடைக்குள் வந்த இளைஞரின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்தக் காட்சிகளையும், 12ஆம் தேதி முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரின் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவரது கைகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருப்பது தெரியவந்தது. இந்த டாட்டூவே கொள்ளையனை அடையாளம் காண்பதற்கான முக்கிய தடயமாக அமைந்தது. மேலும், நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, முகமூடி, ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்தபடி இளைஞர் ஒருவர் பைக்கில் வேகமாகப் பேக்குடன் சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இதன் அடிப்படையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து நிஷாந்த் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கான வீடியோ எடிட்டிங் பணிகளையும் செய்து வந்துள்ளார்.

மேலும், கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நண்பர்களுடன் ஜாலி ரைடு செல்வது, சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று வருவது என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தனது கல்லூரிக் காலத் தோழியும், பிரபல இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சியைக் காதலித்து வந்துள்ளார். தற்போது மீனாட்சி புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதற்குப் போதிய பணம் இல்லாமலும், பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் கூறி காதலன் நிஷாந்திடம் கண்ணீர் விட்டுக் கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் காதலியின் நிலையைப் பார்த்து கலங்கிய நிஷாந்த், ஹாலிவுட் தொடரான Money Heist பாணியில் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு மீனாட்சியும் உதவியதுடன், தனது பைக்கையும் கொள்ளைக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுத்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரும் திட்டமிட்டபடி, கடந்த 5ஆம் தேதி நிஷாந்த் தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாகச் சென்று, லிப்ட் அருகே அமைக்கப்பட்டிருந்த அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளார். அப்போது கடைக்குள் நுழைவதற்குத் தேவையான கருவிகளை எடுத்துச் சென்று, 12ஆம் தேதி நள்ளிரவு மீண்டும் இரும்புச் சாரம் வழியாக மூன்றாவது தளத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு லிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், லிப்ட் ஷட்டர் வழியாக உள்ளே சென்று அதனை உள்புறத்தில் இருந்து திறந்துள்ளார். பின்னர் மீண்டும் ஷட்டரைத் திறக்க முடியாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அதன் நடுவில் கம்பியை வைத்துவிட்டு, ஒவ்வொரு தளமாக இறங்கிச் சென்று படிக்கட்டு வழியாகத் தரைத்தளத்தில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார்.

தொடர்ந்து கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை எவ்வித பதற்றமும் இன்றி ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பேக்கில் பத்திரமாக வைத்துள்ளார். பின்னர் அந்தப் பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டு, மீண்டும் லிப்ட் ஷட்டரில் வைத்திருந்த கம்பியை அகற்றிவிட்டு, அதே வழியாகக் கயிற்றின் உதவியுடன் ஒவ்வொரு தளமாகச் சென்று இரும்புச் சாரம் வழியாக வெளியேறியுள்ளார்.

முன்னதாக, நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடையின் பின்புறப் பகுதிக்கு வந்தபோது அங்கிருந்த நாய்கள் அவரைத் துரத்தியதால் முதற்கட்ட முயற்சியைக் கைவிட்டுள்ளார். பின்னர் அந்தப் பகுதியைச் சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் மேலே சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+