ஹப்பாடா.. சென்னை சாலைகளுக்கு பிறந்த விடிவுகாலம்.. அரசு எடுத்த அதிரடி ஆக்சன்.. இனி கவனமா இருங்க!
சென்னையின் 18 பிரதான சாலைகளை மொத்தமாக மாற்ற போவதாக தெரிவித்து உள்ளனர்.
சென்னை: சென்னையில் இருக்கும் சாலைகளில் முக்கியமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு கடந்த பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிங்கார சென்னை
ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணிகள்
இதில் பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இந்த நிலையில்தான் சென்னையின் 18 பிரதான சாலைகளை மொத்தமாக மாற்ற போவதாக தெரிவித்து உள்ளனர். இந்த சாலைகளை குப்பையில்லா சாலைகளாக அதாவது Litter Free Corridor ஆக பராமரிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே சாலைகளில் இருந்து மொத்தமாக குப்பைகள், கழிவுகள் அகற்றப்படும். அதன்பின் இங்கே குப்பை போடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும். குறிப்பிட்ட சாலைகளில் குப்பைகளை வீச தடை விதிக்கப்படும். இங்கே குப்பை வீசும் நபர்களிடம் இருந்து ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவர்களிடம் இருந்து மொத்தம் ₹64,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

என்னென்ன சாலைகள்
முதற்கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் இந்த மாற்றங்களை பெற உள்ளன. பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை ஆகிய சாலைகளில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளிலும் இந்த மாற்றம் செய்யப்படும். இப்படி மொத்தம் 18 சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை சாலைகள்
உயர் அடுக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி, புதிய சாலைகள், போஸ்டர் ஒட்ட தடை, கூடுதல் பாலங்கள் என்று சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல பூங்காக்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன. முன்னதாக சென்னையில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தெருக்களுக்கு புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு தெருக்களிலும் புதிய போர்ட் வைக்கும் போதே, ஜாதி பெயர்களையும் சேர்த்து நீக்கி வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 33 ஆயிரத்து 834 தெருக்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications