வணிகர்களின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி.. அறிவிப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். கல்வி கடனை தொடர்ந்து தற்போது நடைபாதை கடை வணிகர்கள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. விரவைில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.

இதனால் அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக வங்கிகளில் வாங்கிய பல்வேறு கடன்கள் அதிமுக வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து வருகிறார்.
நடைபாதை வணிகர் கடன் ரத்து
அந்த வரிசையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் நடைபாதை கடை வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் கூறியிருந்தார். அந்த வரிசையில் தற்போது நடைப்பாதை வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனால் நடைபாதை வணிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
முந்தைய வாக்குறுதிகள்
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி சில முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதன்படி, ஆண்டுக்கு இலவசமாக 3 சிலிண்டர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக அதிகரிக்கப்படும் என கூறினார்.
மேலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை அளித்து இருந்தார்.
மகளிருக்கு மாதம் ரூ.2,000
அதற்கு முன்பாக ‛குலவிளக்கு' திட்டம் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும். பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பேருந்துகளில் இலவச பயணம். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
5 லட்சம் பெண்களுக்கு 'அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்' கீழ் ₹25,000 மானியம் வழங்கப்படும். வீடில்லா ஏழைகளுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications