வாரிசு பொறக்கப் போகுது.. வெளிநாட்டில் ஸ்கேன் எடுத்து இங்கே சொன்னால் ஜெயில் தான்! அரசின் வார்னிங்!
சென்னை: வெளிநாடுகளுக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு கருவின் பாலினத்தை தெரிவிக்கும் இந்தியர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோடு, கடந்த ஆண்டு 2025-ல் இச்சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 15 ஸ்கேன் மையங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது.
கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மை அறியும் தொழில்நுட்பமுறைகள் (பாலினதேர்வை தடை செய்தல்) சட்டம் 1994 -ன் பிரிவு 16(A)-ன் படி அமைக்கப்பெற்ற மாநில மேற்பார்வை குழு (PCPNDT-State Supervisory Board) கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்த வாய்வுக் கூட்டத்தில் இயக்குநர், தேசிய நல்வாழ்வு குழுமம், திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்டம், ஆணையர் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, அரசு கூடுதல் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, அரசு இணை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், இயக்குநர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், இயக்குநர் குடும்பநலம்.
இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மெட்ராஸ் சமூக சேவை பள்ளி உதவி பேராசிரியர், மகளிர் சட்ட குழுமம், சென்னை உயர்நீதிமன்றம், NGO உறுப்பினர்கள். இயக்குநர், மகப்பேறு மற்றும் மகளிர் நல அரசு மருத்துவமனை, RSRM மருத்துவமனை, இயக்குநர். குழந்தைகள் நல மருத்துவமனை, இயக்குநர், பெர்னார்ட் கதிரியக்க மையம், மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, கதிரியக்க துறை இயக்குநர், கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சார்பு செயலாளர், நியமன அலுவலர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முதலில் 1994 -ல் பெண் குழந்தைகள் கருக்கலைப்பை தடுக்கும் நோக்கில் இயற்றப்பட்ட இச்சட்டமானது 2003 -ல் திருத்தம் செய்யப்பட்டு கருவுறுதலுக்கு முன் பாலினத் தேர்வை தடை செய்யும் முறைகளும் (Pre Conception) இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாட்டில் PCPNDT 1994 சட்டத்தின் படி மொத்தம் 9070 பதிவுபெற்ற அரசு (1727) மற்றும் தனியார்(7343) ஸ்கேன் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவை அறிவிப்பு எண் 91ன் படி மண்டலவாரியாக தமிழ்நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தும் பொருட்டு முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் 31.05.2025 அன்று தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக கோவை மதுரை கன்னியாகுமரி ஆக மொத்தம் நான்கு மண்டலங்களில் நடைபெற்றது. இதில் 2492 தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் பயிற்சி பெற்றனர்.
இன்றைய கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் ஆய்வு செய்யப்பட்டது:
1. மாநிலத்தில் செயல்பட்டு வரும் உரிய அதிகாரிகள் (Appropriate Authorities) மேற்கொள்ளும் பரிசீலனை செய்து உரிய செயல்பாடுகளை ஆலோசனைகளை இக்குழு இன்று வழங்கியது.
2. PCPNDT 1944 சட்டத்தை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிவகைகள் ஆய்வு செய்யப்பட்டது.
3. வெளிநாடுகளுக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு கருவின் பாலினத்தை தெரிவிக்கும் இந்தியர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
4. கடந்த ஆண்டு 2025-ல் இச்சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 15 ஸ்கேன் மையங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 38 மாவட்டங்களில் உள்ள ஆலோசனைக் குழுக்கள் மூலம் 1747 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 1608 மையங்கள் 2025 ஆம் ஆண்டில் மட்டும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் 15 சட்ட நடவடிக்கைகள் விதி மீறுபவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது.
பாலினம் விகிதம் 2021-22 ஆம் ஆண்டில் 934 என இருந்தது, தற்போது 2025-26 ஆம் ஆண்டில் 941 என உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில மேற்பார்வைக் குழுவினை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகளை பயனுள்ளதாக அமல்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் பெண் சிசுக்கொலைகள் குறைந்து பெண்களின் பாலின விகிதம் மேம்படும் என்ற கருத்துடன் இக்கூட்டம் நிறைவு பெற்றது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications