தோழன் இறந்த சோகம்.. அதே நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நண்பன்!
சென்னை: நண்பன் இறந்த சோகம் தாளாமல், அதே தேதியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் இன்று நடந்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயதான சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், தன்னுடைய உயிர்தோழன் இறப்பைத் தாங்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுரேஷ் முதலாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்துள்ளார். அதே கல்லூரியில் உதயகுமார் என்ற மாணவரும் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். இவர்கள் இருவரும் 11ம் வகுப்பிலிருந்தே நண்பர்கள் என தெரியவந்துள்ளது. அதனால் இருவரும் ஒரே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஒன்றாகவே படித்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 5-ம் தேதி உதயகுமார் உயிரிழந்தார். நண்பனின் இழப்பை சுரேஷால் தாங்க முடியவில்லை. உதயகுமார் இறந்தபோதே தானும் இறந்து விடுவதாக கதறி அழுதிருக்கிறார். சுரேஷை அவரது பெற்றோர்கள் தேற்றி கண்காணித்து வந்துள்ளனர். இந்த சோகத்தில் சுரேஷ் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் நண்பன் உதயகுமார் இறந்துபோன 5-ம் தேதியே தானும் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மாதம் தூக்க மாத்திரைகளை வாங்கிவைத்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதை சுரேஷின் பெற்றோர்கள் தடுத்திருக்கிறார்கள். சுரேஷின் பெற்றோர்கள் அவரைக் கண்டித்து இனியும் இதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சுரேஷ், அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர்கள், சுரேஷை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுரேஷ் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலிஸார் வழக்குப்பதிந்து, தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழகிய நண்பனின் இழப்பை தாங்க முடியாமல் நண்பனுக்காக தானும் அதே தேதியில் உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுரேஷ் ஜனவரி 5ம் தேதியான இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications