அமரன் படத்தில் பயன்படுத்தியது என்னுடைய மொபைல் எண்! ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கோரி மாணவர் வழக்கு
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்குவந்த அமரன் திரைப்படத்தில், கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தனது எண்ணை காண்பித்ததால், பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி சென்னை அழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தன்னால் படிக்க முடியவில்லை, பயணிக்க முடியவில்லை என்றும், மொபைலை ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றுவதற்குள் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் தான் காரணம் என சொல்ல தேவையில்லை என்றும், இதுகுறித்து அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றும் அந்த தவறை அவர்கள் திருத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன என்றும், அரசியல் சாசனம் தனக்கு வழங்கியுள்ள வாழ்வுரிமை, அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படுவதால் ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழ்ப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications