தமிழகத்தில் பள்ளி தேர்வு அட்டவணை மாற்றத்தால் மாணவர்கள் குழப்பம்.. அதிகாரிகள் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தேர்வு அட்டவணை திடீரென மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதேநேரம் தேர்வுகளை ஏற்கனவே அறிவித்தபடி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
17வது லோச்சபாவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் லோச்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், தேர்வை முன்கூட்டிய நடத்தி முடிக்க திட்டமிட்டது அரசு.

ஏற்கனவே பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 8-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது..
இதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க செய்து அதற்கேற்றாற்போல் அட்டவணையையும் வெளியிட்டது. 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாகவும், 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாகவும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10 மற்றும் 12-ந் தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளை முறையே வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இதனால் கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? என்ற கேள்வி எழுந்தது. மேலும் தேர்வு தேதி மாற்றப்பட்ட நாட்களில் அதாவது, 10 மற்றும் 12-ந் தேதிகளில் வகுப்புக்கு வர வேண்டுமா? 12-ந் தேதியில் இருந்து 22-ந் தேதி வரையிலான இடைப்பட்ட நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டுமா? என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும் போது, '10 மற்றும் 12-ந் தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23-ந் தேதிகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதனால் 10 மற்றும் 12-ந் தேதிகளில் வகுப்பு நடைபெறும். அதன்பின்னர், 22 மற்றும் 23-ந் தேதி நடைபெறும் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வந்தால் போதும். இடைப்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றார்கள்.
இதனிடையே 10 மற்றும் 12ம் தேதி வகுப்புகள் நடைபெறம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமே தேர்வுகளை முடித்துவிட்டால், கோடை விடுமுறையை கொண்டாடா சொந்த ஊர் அல்லது வெளியூர் செல்ல மக்களுக்கு எளிதாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி தேர்வு அட்டவணையை திடீரென மாற்றியிருப்பதை கேட்டு பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications