சென்னை ஈசிஆர் சாலை ஸ்தம்பித்தது.. பிரபல கல்லூரி மாணவர் ரத்த வாந்தி எடுத்து பலி.. சக மாணவர்கள் ஆவேசம்
சென்னை கானத்தூரில் கிழக்கு கடற்சாலையை ஒட்டி தனியார் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பிஇ,பிடெக், பிஎஸ்சி உள்பட பல்வேறு படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.
சென்னை கானத்தூரில் கிழக்கு கடற்சாலையை ஒட்டி தனியார் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏரளமான மாணவர்கள் பிஇ,பிடெக், பிஎஸ்சி உள்பட பல்வேறு படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.

கடல்வழி தொடர்பு மற்றும் கடல்வழிப் பணி ஆகியவை பாடங்களாக உள்ளன. கடல் சார்ந்த வேலைகளில் பணிபுரிய வேண்டி இந்த பல்கலைக்கழகத்தில் பலரும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகம் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22-வயதான பிரசாந்த் என்ற கல்லூரி மாணவன் இந்த நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் பிஇ நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்த பிரசாந்த் இன்று அதிகாலை, இரத்த வாந்தி எடுத்ததாக சக மாணவர்கள் கூறினர்.
இதையடுத்து சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். உடனடியாக மாணவர் பிரசாந்த், கானத்தூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மாணவன் பிரசாந்த் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவர் பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்து இறந்தது எப்படி என்பது தெரியவில்லை. அவரது இறப்பை தாங்க முடியாத சக கல்லூரி மாணவர்கள் நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் டூட்டி ஆபிசர் புருஷோத்தமன் என்பவர், உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர் பிரசாந்த்துக்கு ஓய்வு கொடுக்காததால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். எங்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கல்லூரியின் எதிரே இன்று அதிகாலை அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவியது.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.இந்த சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலை பகுதியே ஸ்தம்பித்து போனது. இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், புருஷோத்தமனை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications