முடிச்சு விட்டீங்க போங்க.. கடந்த 2 ஆண்டுகளில் உலகில் நடந்த பெரிய மாற்றம்! ஆபத்தில் இந்தியா
சென்னை: உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் வெப்பநிலை சராசரியை விட 1.5 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவை புரட்டி போட்டுவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் அதிகரிக்கும். இது சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சொன்னது வேற, செஞ்சது வேற:
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு என கையில கிடைச்சது எல்லாத்தையும் போட்டு எரிச்சா இப்படித்தான் உலகம் வெப்பமடையும். இதையெல்லாம் ஏற்கெனவே தெரிஞ்சு வச்சிருந்த உலக நாடுகள், பாரிஸ்ல போய் ஒரு ஒப்பந்தம் போட்டாங்க. அதன்படி, இப்போ இருக்குற வெப்ப நிலையிலிருந்து, 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தை குறைப்பது என்று முடிவெடுத்திருந்தார்கள்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பா என மொத்தம் 196 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. ஆனா.. முழு பூசணியை சோத்துல மறைக்க முடியுமா? ஒப்பந்தம் போட்ட நாடுகள் வெப்பத்தை குறைக்க போதுமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருக்கிறது என்று சமீபத்தில் வெளியான ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆக சொன்னது வேற.. செஞ்சது வேற!
ஆய்வு என்ன சொல்லுது?:
ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் உலகம் முழுவதும் பதிவாகும் வெப்பநிலையை ஆய்வு செய்து வருகிறது. இப்படி செய்யப்பட்ட ஆய்வில், கடந்த 2023 மற்றும் 2024ல் வெப்பம் அதிகரித்திருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறது. இதன் காரணமாக ஸ்பெயின் முதல் கென்யா வரையிலும், அமெரிக்கா தொடங்கி நேபாளம் வரையிலும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு வெப்ப உயர்வுதான் காரணம். மொத்தமாக ரூ.2,576 கோடி மதிப்பிலான இழப்பை இந்த பேரிடர்கள் ஏற்படுத்தியுள்ளன என ஆய்வு கூறுகிறது.
இப்போ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அப்புறம் கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டு தீக்கு கூட இந்த வெப்பமயமாதல்தான் காரணமாம்.
இந்தியாவுக்கு என்ன ஆபத்து?:
நம் நாட்டை பொறுத்தவரை, கடலோர நகரங்கள்தான் செழிப்பாக இருக்கின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, குஜராத் போன்றவை உதாரணம். இனி இந்த நகரங்கள் மெல்ல அழிய தொடங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. காரணம் வெப்பநிலை உயர்வுதான். சூடு ஏறுச்சுனா பனி உருகும். அண்டார்டிகா, ஆர்டிக் பகுதியில் அதிகமான பனி இருக்கிறது. எந்த அளவுக்கு அதிகம் என்றால், அமெரிக்கா முழுவதும் பனி கட்டியாக இருந்தால் எப்படி இருக்குமோ? அதை விட அதிகம்.
இது உருகினால் உலகம் முழுவதும் கடல் மட்டம் 60 மீ அதிகரிக்கும். எனவே மேற்குறிப்பிட்ட நகரங்களின் பெரும்பான்மையான பகுதி நீரில் மூழ்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல இமய மலையில் உள்ள பனியும் உருகும். இதனால் அங்கு வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினங்கள் அழிந்துவிடும். அதேபோல, இமயமலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் சீக்கிரமாகவே வறண்டுபோய்விடும்.
சென்னைக்கும் காத்திருக்கும் ஆபத்து:
கடல் மட்டம் அதிகரித்தால் சென்னையில் மெரினா பீச், அடையாறு, பங்கிங்காம் கால்வாய் எல்லாம் கடலுக்கு அடியில் மூழ்கிவிடும். இப்போவே சென்னையில குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்கிறது. கடல் மட்டம் அதிகரித்தால் குடிக்க தண்ணி சுத்தமா கிடைக்காது. நிலத்தடி நீர் எல்லாம் உப்பாகிவிடும். இது நம்மை போன்ற சாமானிய மக்களைதான் அதிகம் பாதிக்கும். பலர் தொற்று நோயாலும், வெள்ள பாதிப்பாலும் உயிரிழந்துபோவார்கள்
வானிலை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போய்விடும். வானிலை மையம் சொல்ற தேதியில் மழை வரல என பலரும் புலம்பி வருகின்றனர். ஆனாலும் பெரும்பான்மையான கணிப்புகள் சரியாக இருக்கிறது. ஆனால் இனி வரும் காலங்களில் எப்போ மழை பெய்யும், எப்போது புயல் வரும்னு சொல்ல முடியாது. டிசம்பருக்கு பதில், மே மாதத்தில்கூட சென்னைக்கு புயல் வர வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே முழிச்சிக்கோ, பொழைச்சுக்கோ என இயற்கை வெப்பநிலை உயர்வு மூலம் வார்னிங் கொடுத்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications