பாதுகாப்பு செஞ்சிருந்தோம்.. இப்படி நடக்கும்னு நினைக்கல! மோகன்ராஜ் மரணம் குறித்து பா.ரஞ்சித் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் மரணம் அடைந்தார். இது தொடர்பாக பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஷூட்டிங்கின் போது விபத்து நடந்தது எப்படி என விளக்கம் அளித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், மோகன்ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது வேட்டுவம் படத்தை தயாரித்து வருகிறார். அவரது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் ஆர்யா, தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில் நடைபெற்றது. அப்போது கார் சண்டை காட்சி ஒன்று படம் பிடிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த கார் விபத்தில் சிக்கியது.

pa ranjith cinema accident

அந்த ஸ்டண்டை செய்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அவர் விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித், பிரபாகரன், ராஜ் கமல், வினோத் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷூட்டிங்கின் போது விபத்து நடந்தது எப்படி என விளக்கம் அளித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், மோகன்ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த "வேட்டுவம்" படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம்.

அவரின் மனைவி, குழந்தைகள், குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.

ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குநர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.

இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+