சர்ச்சை! பிலிம் இன்ஸ்டிடியூட் லெக்சரர் பணிக்கு இந்தி, சமஸ்கிருத பட்டம் ஏன்?: சு.வெங்கடேசன் கேள்வி!
சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். 2016- 2017 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்த ஃபிலிம் இன்ஸ்டிடியூட், திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கிய பெருமை கொண்டது.
இந்நிலையில், எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணிக்கு நேர்காணல் அழைப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை காட்சிக்கலை (B.A Visual Arts) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க பகுதி நேர கௌரவ விரிவுரையாளர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு கல்வித் தகுதியாக, காட்சிக்கலையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 21, 2023
திரைப்பட பயிற்சி நிறுவனத்தின்
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?
இந்த அறிவிப்பின் மீது மாண்புமிகு @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். pic.twitter.com/wyPls5lXJD
இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் முதுநிலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications