“இட்லி,தோசை சுட வரல..” அண்ணாமலை ஸ்டைலில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
"தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிடமுடியும்?"
சென்னை: தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அதை திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்பி சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் அடுத்தடுத்து தற்கொலை என்னும் துயர முடிவை தேடிக்கொண்டனர். இதற்கு தடை விதிக்க பலர் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து அன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை ரத்து செய்தது.

ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம்
இதனை அடுத்து கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில், ஆளுநர் ரவி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கும் நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். அத்துடன் அவர் 8 கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சு.வெங்கடேசன் கண்டனம்
இந்த நிலையில், பல்வேறு தரப்பினர் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

இட்லி தோசை சுட வரல
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட ஒப்புதல் மறுப்பு. திரும்பி அனுப்பினார் ஆளுநர். தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிடமுடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications