பொங்கல் அன்று சி.ஏ.தேர்வு! இந்த எத்தனை முறை சொன்னாலும் மத்திய அரசு திருந்தாது- சு.வெங்கடேசன்
சென்னை: பொங்கல் திருநாள் அன்று தேர்வுகளை வைத்து தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுக்க சார்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வு (பட்டயக் கணக்காயர்) நடத்தப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு பவுண்டேஷன் தேர்வுக்கான அட்டவணையை தி சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதன்படி 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் அக்கவுண்டிங் தேர்வானது ஜனவரி 12 ம் தேதியும் பிசினஸ் லாஸ் தேர்வு ஜன 14 ஆம் தேதியும் திறனறித் தேர்வு ஜன 16 ஆம் தேதியும் பிசினஸ் எக்கனாமிக்ஸ் தேர்வு ஜன 18ஆம் தேதியும் நடத்தப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அது போல் திருவள்ளுவர் தினமானது ஜனவரி 15ஆம் தேதியும் உழவர் திருநாள் 16 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. எனவே தமிழகத்தில் போகி பண்டியையான ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை விடுமுறையாகும்.

இந்த விடுமுறை நாளில் இது போல் சி.ஏ.தேர்வு வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார். மேலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் எஸ்பிஐ வங்கித் தேர்வையும் பொங்கல் பண்டிகை அன்றே மத்திய அரசு நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே பொங்கல் பண்டிகை அன்று வைக்கப்பட்டுள்ள தேர்வை மாற்றி வைக்குமாறு சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications