சென்னை பீச் - தாம்பரம் ரூட்.. மின்சார ரயிலில் டிராவல் பண்றீங்களா.. உடனே இதை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலும், கடற்கரை - செங்கல்பட்டு வரையிலும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்துக்கு உயிர் நாடியாக இருப்பது புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்று சொல்லலாம். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையினை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். பீக் நேரங்களில் ஒரு மணி நேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டால் கூட சென்னையே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு இந்த ரயில் சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால் தான் பராமரிப்பு பணிகள் கூட பெரும்பாலும் விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. அரக்கோணம், வேளச்சேரி ஆகிய ரூட்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரூட் தான் எப்போதும் படு பிசியாக காணப்படும் வழித்தடமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை டூ எழும்பூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை டூ தாம்பரம் வரையிலான மின்சார சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை சென்னை கடற்கரை டூ கூடுவாஞ்சேரில் செல்லும் ரயில் சேவைகள் பகுதியாகவும், சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* இன்று 15 ஆம் தேதி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு அதிகாலை 03:50, 4.15, 4.35 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரைக்கு பதிலாக எழும்பூரில் இருந்து செங்கல்பட்டுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும்.
* இன்று 15 ஆம் தேதி மற்றும் நாளை 16 ஆம் தேதி செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து இரவு 10.10, 11.00 மணிக்கு புறப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* இன்று 15 ஆம் தேதி மற்றும் நாளை 16 ஆம் தேதி சென்னை கூடுவாஞ்சேரி முதல் சென்னை கடற்கரைக்கு இரவு 10.40, 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
* நாளை 16 ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 5.50 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications